Singers : Haricharan Seshadri and Sinduri

Music by : Vishal Chandrashekhar

Lyrics by : Madhan Karky

Female : Vinnodu minnadha vinmeen edhu
Male : Adhu adhu un punnagai
Female : Otrai poo pookindra dhesam edhu
Male : Adhu adhu un paadhugai

Female : Thudikkum erimalai edhu
Male : Adhu en nenjam thaanadi

Female : Inikkira thee edhu
Male : Adhu undhan theendalae
Female : Sudugira poi edhu
Male : Adhu undhan naanamae anbae

Both : Kannukkullae karaindha nilavu
Enadhu iravai thirududho
Uyirinai varududho
Kannukkullae nuzhaintha kanavu
Unadhu vadhanam varainthadho
Irudhayam nirainthadho

Carnatic : ………………….

Female : Oosi kan kaana noolum edhu
Male : Pennae un idai adhu
Female : Yaarum kolla inbam kondathu yedhu
Male : Nee soodum aadai adhu

Female : Mayakkidum bodhaiyo edhu
Male : Aduthu nee solla povadhu
Female : Aadaigalai kalaintha piragum
Ozhiyai anivadhu
Male : Nila adhu

Both : Kannukkullae karaindha nilavu
Enadhu iravai thirududho
Uyirinai varududho
Kannukkullae nuzhaintha kanavu
Unadhu vadhanam varainthadho
Irudhayam nirainthadho

Carnatic : ………………….

Male : Kobangal illa yudham edhu
Female : Meththaiyil nigazhvadhu
Male : Mounam adhai vellum oar paadal edhu
Female : Muththathin ozhi adhu

Male : Badhil illa kelviyum edhu
Female : Aduthu nee ketka povadhu
Male : Iru nizhal nerungum pozhudhu
Norungum porul edhu
Female : Hmm mm hmm mm

Both : Kannukkullae karaindha nilavu
Enadhu iravai thirududho
Uyirinai varududho
Kannukkullae nuzhaintha kanavu
Unadhu vadhanam varainthadho
Irudhayam nirainthadho

பாடகர்கள்  : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் சிந்தூரி

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : விண்ணோடு மின்னாத விண்மீன் எது
பெண் : அது அது உன் புன்னகை
ஆண் : ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது
பெண் : அது அது உன் பாதுகை

ஆண் : துடிக்கும் எரிமலை எது
பெண் : அது என் நெஞ்சம் தானடி

ஆண் : இனிக்கிற தீ எது
பெண் : அது உந்தன் தீண்டலே
ஆண் : சுடுகிற பொய் எது
பெண் : அது உந்தன் நாணமே அன்பே

இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ
உயிரினை வருடுதோ
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ
இருதயம் நிறைந்ததோ

கர்நாடிக் : ……………..

பெண் : ஊசி கண் காணா நூலும் எது
ஆண் : பெண்ணே உன் இடை அது
பெண் : யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது
ஆண் : நீ சூடும் ஆடை அது
பெண் : மயக்கிடும் போதையோ எது
ஆண் : அடுத்து நீ சொல்ல போவது
பெண் : ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது
ஆண் : நிலா அது

இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ
உயிரினை வருடுதோ
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ
இருதயம் நிறைந்ததோ

கர்நாடிக் : …………………..

ஆண் : கோபங்கள் இல்லா யுத்தம் எது
பெண் : மெத்தையில் நிகழுவது
ஆண் : மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது
பெண் : முத்தத்தின் ஒலி அது
ஆண் : பதில் இல்லா கேள்வியும் எது
பெண் : அடுத்து நீ கேட்க போவது
ஆண் : இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ
உயிரினை வருடுதோ
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ
இருதயம் நிறைந்ததோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here