Singer : Mahalingam

Music by : C. Sathya

Male : En kannukulla unna vachen
Novaama kaakka
Kan avinji ponathenna
Ooraarum paakka

Male : Nalla thanni kinaru
Onnu nodiyila
Nanji pattu thoonthathu
En madiyila

Male : Vaazha vandha thangam
Neeyum vazhiyila…aa…
Verarundhu vizhunthathu
Yen theriyala

Male : En kannukulla unna vachen
Novaama kaakka
Kan avinji ponathenna
Ooraarum paakka

Male : Aasayila un mugatha
Arumba paathiruppa
Pesayila dhevadhaya
Kurumba paathiruppa

Male : Odi varum un nadaiyil
Vellalaya paathiruppa
Nee utkaarum perazhagil
Ooviyatha paathiruppa

Male : Athanaiyum paarthavizhi
Moodalayae
Kai irunthum kaal irunthum
Moochi vida thonalayae

Male : Hey en kannukulla unna vachen
Novaama kaakka

Male : Paarvaiyila pesiyadha
Vachirukken patthirama
Pakkathula nikkayilum
Pakkala nee sathiyama

Male : Kanna katti kaattulathaan
Vittutiyae appadiyae
Kaalu patta mannulathaan
Sanjathenna uthamiyae

Male : Pathu jenmam vaazha thaanae
Nee porantha
Paala pola thirinji yendi
Pattunu ver arundha

Male : Kannukulla unna
Eh kannukulla unna
Kannukulla unna vachen
Novaama kaakka
Kan avinji ponathenna
Ooraarum paakka

Male : Nalla thanni kinaru
Onnu nodiyila
Nanji pattu thoonthathu
En madiyila…
Kannukulla….
Kannukulla…aaa….aaa….

பாடகர் : மகாலிங்கம்

இசை அமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க

ஆண் : நல்ல தண்ணி கிணறு
ஒன்னு நொடியில
நஞ்சி பட்டு தூந்தது
என் மடியில

ஆண் : வாழ வந்த தங்கம்
நீயும் வழியில..ஆஆ…
வேரறுந்து விழுந்தது
ஏன் தெரியல

ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க

ஆண் : ஆசையில ஒன் முகத்த
அரும்பா பாத்திருப்ப
பேசயில தேவதையா
குறும்பா பாத்திருப்ப

ஆண் : ஓடி வரும் உன் நடையில்
வெள்ளலைய பாத்திருப்ப
நீ உட்காரும் பேரழகில்
ஓவியத்த பாத்திருப்ப

ஆண் : அத்தனையும் பார்த்த விழி
மூடலையே
கை இருந்தும் கால இருந்தும்
மூச்சு விட தோனலையே

ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க

ஆண் : பார்வையில பேசியத
வெச்சிருக்கேன் பத்திரமா
பக்கத்தில நிக்கயிலும்
பாக்கல நீ சத்தியமா

ஆண் : கண்ண கட்டி காட்டுலதான்
விட்டுட்டியே அப்படியே
காலு பட்ட மண்ணுலதான்
சாஞ்ச தென்ன உத்தமியே

ஆண் : பத்து ஜென்மம் வாழ தானே
நீ பொறந்த
பால போல திரிஞ்சி ஏண்டி
பட்டுன்னு வேர் அருந்த

ஆண் : கண்ணுக்குள்ள உன்ன
என் கண்ணுக்குள்ள உன்ன
என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன்
நோவாம காக்க
கண் அவிஞ்சி போனதென்ன
ஊர்ராரும் பார்க்க

ஆண் : நல்ல தண்ணி கிணறு
ஒன்னு நொடியில
நஞ்சி பட்டு தூந்தது
என் மடியில

ஆண் : கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள….ஆஆ…..ஆஆ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here