Singer : K. S. Chitra
Music by : Manoj-Gyan
Lyrics by : Vairamuthu
Female : Karpaa adhu karuppaa sivappaa
Pennae adhu unakkaa enakkaa
Karpaa adhu karuppaa sivappaa
Pennae adhu unakkaa enakkaa
Female : Karpu enbathu ullapadi
Nam karppapaiyil illaiyadi
Karpu enbathu ullapadi
Nam karppapaiyil illaiyadi
Female : Adhu manathil ullathu kanmaniyae…oo…oo…
Adhu manathil ullathu kanmaniyae
Naan appadi paarththaal paththiniyae
Female : Karpaa adhu karuppaa sivappaa
Pennae adhu unakkaa enakkaa
Female : Vandugal ennidam vanthathundu
Pala thundugal ennidam vanthathundu
En kadhaiyai kettu azhuthathundu
Sila kadanum solli ponathundu
Female : Vilakkai anaiththaal siththini naan
Adi vidinthu vittaal paththini naan
Kangalil raththam vanthu kaayangal ingae
Idi thaangum pookkal ingae vaazhvathu engae
Female : Karpaa adhu karuppaa sivappaa
Pennae adhu unakkaa enakkaa
Female : Kannagiyai andru azha vaiththaar
Adi atharkku piragae silai vaiththaar
Pagalil pennai thozha vaiththaar
Adi iravil adharkor vilai vaiththaar
Female : Pengal meethuthaan thappirukku
Adi aangalukkengae karpirukku
Pen kulam mattum karppai kaakkattum ingae
Vara sollu pennae antha valluvan engae
Female : Karpaa adhu karuppaa sivappaa
Pennae adhu unakkaa enakkaa
Female : Karpu enbathu ullapadi
Nam karppapaiyil illaiyadi
Karpu enbathu ullapadi
Nam karppapaiyil illaiyadi
Female : Adhu manathil ullathu kanmaniyae…oo…oo…
Adhu manathil ullathu kanmaniyae
Naan appadi paarththaal paththiniyae
Female : Karpaa adhu karuppaa sivappaa
Pennae adhu unakkaa enakkaa
பாடகர் : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா
கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா
பெண் : கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி
கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி
பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே…..ஓ….ஓ….
அது மனதில் உள்ளது கண்மணியே
நான் அப்படி பார்த்தால் பத்தினியே
பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா
பெண் : வண்டுகள் என்னிடம் வந்ததுண்டு
பல துண்டுகள் என்னிடம் வந்ததுண்டு
என் கதையைக் கேட்டு அழுததுண்டு
சில கடனும் சொல்லி போனதுண்டு
பெண் : விளக்கை அணைத்தால் சித்தினி நான்
அடி விடிந்து விட்டால் பத்தினி நான்
கண்களில் ரத்தம் வந்து காயங்கள் இங்கே
இடி தாங்கும் பூக்கள் இங்கே வாழ்வது எங்கே
பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா
பெண் : கண்ணகியை அன்று அழ வைத்தார்
அடி அதற்கு பிறகே சிலை வைத்தார்
பகலில் பெண்ணை தொழ வைத்தார்
அடி இரவில் அதற்கோர் விலை வைத்தார்
பெண் : பெண்கள் மீதுதான் தப்பிருக்கு
அடி ஆண்களுக்கெங்கே கற்பிருக்கு
பெண் குலம் மட்டும் கற்பை காக்கட்டும் இங்கே
வரச் சொல்லு பெண்ணே அந்த வள்ளுவன் எங்கே
பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா
பெண் : கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி
கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி
பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே….ஓ….ஓ….
அது மனதில் உள்ளது கண்மணியே
நான் அப்படி பார்த்தால் பத்தினியே
பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா…..