Singers : Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Karpanai vaathigalin
Pechil mayangi dhesam
Kalangi thavikkirathendre aaduraattae

Male : Karpanai vaathigalin
Pechil mayangi dhesam
Kalangi thavikkirathendre aaduraattae

Male : Urpaththi perukkaamal entha naadum
Ulagil urupattathu illai endru aaduraattae

Chorus : Aaduraattae suzhandru aaduraattae
Intha naadu padum paattai solli aaduraattae

Female : Sinthikka theriyaatha manitharellaam
Naattai seerthiruththa vanthaarendru aaduraattae
Sinthikka theriyaatha manitharellaam
Naattai seerthiruththa vanthaarendru aaduraattae

Male : Santhikku santhi nindru pesuvoraal
Santhikku santhi nindru pesuvoraal
Dhesam santhikkae vanthathendru aaduraattae

Chorus : Aaduraattae suzhandru aaduraattae
Intha naadu padum paattai solli aaduraattae

Female : Poo panthal pol iruntha
Vaazhkkai nalaththai
Palar vaai panthal saaiththathendrae aaduraattae

Female : Poo panthal pol iruntha
Vaazhkkai nalaththai
Palar vaai panthal saaiththathendrae aaduraattae

Male : Thaai pillai pol pazhagi vaazhntha makkalai
Thaai pillai pol pazhagi vaazhntha makkalai
Katchi noi vanthu kalaiththathendru aaduraattae

Chorus : Aaduraattae suzhandru aaduraattae
Intha naadu padum paattai solli aaduraattae

Male : Maaruthal vendumendru makkal ninaiththaal
Adharkku therthal undu endru aaduraattae
Maaruthal vendumendru makkal ninaiththaal
Adharkku therthal undu endru aaduraattae

Male : Antha therthalil puriyaamal therntheduththaal
Ini thaerthal illai endru aaduraattae
Mana aaruthal illai endru aaduraattae

Chorus : Aaduraattae suzhandru aaduraattae
Intha naadu padum paattai solli aaduraattae

Female : Gandhi kadan theerkkaamal
Ayal naattil kaiyai yaenthu kadan pattomendru
Aaduraattae

Female : Gandhi kadan theerkkaamal
Ayal naattil kaiyai yaenthu kadan pattomendru
Aaduraattae

Male : Unmai
Female : Uzhaippu
Male : Anbu
Female : Ahimsai endru

Female : Gandhi kadan theerkkaamal
Ayal naattil kaiyai yaenthu kadan pattomendru
Aaduraattae

Male : Neendhi karai saevatharkku
Uzhaippai vittaal
Neendhi karai saevatharkku
Uzhaippai vittaal
Unmai uzhaippai vittaal
Veru shanthi illai endru solli aaduraattae
Female : Aaduraattae aaduraattae

Male : Aaduraattae deiva bakthi tharum
Sakthi endru aaduraattae

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்

மற்றும் ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கற்பனை வாதிகளின்
பேச்சில் மயங்கி தேசம்
கலங்கி தவிகிறதென்றே ஆடுராட்டே

ஆண் : கற்பனை வாதிகளின்
பேச்சில் மயங்கி தேசம்
கலங்கி தவிகிறதென்றே ஆடுராட்டே

ஆண் : உற்பத்தி பெருக்காமல் எந்த நாடும்
உலகில் உருப்பட்டது இல்லை என்று
ஆடுராட்டே

ஆண் : உற்பத்தி பெருக்காமல் எந்த நாடும்
உலகில் உருப்பட்டது இல்லை என்று
ஆடுராட்டே

குழு : ஆடுராட்டே சுழன்று ஆடுராட்டே
இந்த நாடு படும் பாட்டை சொல்லி ஆடுராட்டே

பெண் : சிந்திக்க தெரியாத மனிதரெல்லாம்
நாட்டை சீர்திருத்த வந்தாரென்று ஆடுராட்டே
சிந்திக்க தெரியாத மனிதரெல்லாம்
நாட்டை சீர்திருத்த வந்தாரென்று ஆடுராட்டே

ஆண் : சந்திக்கு சந்தி நின்று பேசுவோரால்
சந்திக்கு சந்தி நின்று பேசுவோரால்
தேசம் சந்திக்கே வந்ததென்று ஆடுராட்டே

குழு : ஆடுராட்டே சுழன்று ஆடுராட்டே
இந்த நாடு படும் பாட்டை சொல்லி ஆடுராட்டே

பெண் : பூ பந்தல் போல் இருந்த
வாழ்க்கை நலத்தை
பலர் வாய் பந்தல் சாய்த்ததென்றே ஆடுராட்டே

பெண் : பூ பந்தல் போல் இருந்த
வாழ்க்கை நலத்தை
பலர் வாய் பந்தல் சாய்த்ததென்றே ஆடுராட்டே

ஆண் : தாய் பிள்ளை போல் பழகி வாழ்ந்த மக்களை
தாய் பிள்ளை போல் பழகி வாழ்ந்த மக்களை
கட்சி நோய் வந்து கலைத்ததென்று ஆடுராட்டே

குழு : ஆடுராட்டே சுழன்று ஆடுராட்டே
இந்த நாடு படும் பாட்டை சொல்லி ஆடுராட்டே

ஆண் : மாறுதல் வேண்டுமென்று மக்கள் நினைத்தால்
அதற்க்கு தேர்தல் உண்டு என்று ஆடுராட்டே
மாறுதல் வேண்டுமென்று மக்கள் நினைத்தால்
அதற்க்கு தேர்தல் உண்டு என்று ஆடுராட்டே

ஆண் : அந்த தேர்தலில் புரியாமல் தேர்ந்தெடுத்தால்
இனி தேர்தல் இல்லை என்று ஆடுராட்டே
மன ஆறுதல் இல்லை என்று ஆடுராட்டே

குழு : ஆடுராட்டே சுழன்று ஆடுராட்டே
இந்த நாடு படும் பாட்டை சொல்லி ஆடுராட்டே

பெண் : காந்தி கடன் தீர்க்காமல்
அயல் நாட்டில் கையை ஏந்தி கடன் பட்டோமென்று
ஆடுராட்டே

பெண் : காந்தி கடன் தீர்க்காமல்
அயல் நாட்டில் கையை ஏந்தி கடன் பட்டோமென்று
ஆடுராட்டே

ஆண் : உண்மை
பெண் : உழைப்பு
ஆண் : அன்பு
பெண் : அகிம்சை என்று

பெண் : காந்தி கடன் தீர்க்காமல்
அயல் நாட்டில் கையை ஏந்தி கடன் பட்டோமென்று
ஆடுராட்டே

ஆண் : நீந்தி கரை சேர்வதற்கு
உழைப்பை விட்டால்
நீந்தி கரை சேர்வதற்கு
உழைப்பை விட்டால்
உண்மை உழைப்பை விட்டால்
வேறு சாந்தி இல்லை என்று சொல்லி ஆடுராட்டே
பெண் : ஆடுராட்டே ஆடுராட்டே

ஆண் : ஆடுராட்டே தெய்வ பக்தி தரும்
சக்தி என்று ஆடுராட்டே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here