Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Karpanaikku maeni thanthu
Kaal salangai pottu vittaen
Kaal salangai pona idam
Kadavulukkum thondravillai

Male : Dheivathin thaereduththu deviyai thedu
Devikku thoodhu solla thendralae odu
Dheivathin thaereduththu deviyai thedu
Devikku thoodhu solla thendralae odu

Male : Aavikkul aavi aanantha yaedu
Avalillai endraal naan verum koodu
Aavikkul aavi aanantha yaedu
Avalillai endraal naan verum koodu

Male : Paavaikku pottu vaithaen naanoru kodu
Paavaikku pottu vaithaen naanoru kodu
Paadi paranthathammaa ilanguyil bedu
Ilanguyil bedu….oo….

Male : Dheivathin thaereduththu deviyai thedu
Devikku thoodhu solla thendralae odu

Male : Neer vattri ponathendru
Ninaivinil vedippu
Nenjaththil thondruthammaa
Vasanthathin thudippu

Male : Maamazhai megam indru
Kangalil iruppu
Margazhi paniyandro
Avalathu sirippu
Avalathu sirippu…oo….

Male : Dheivathin thaereduththu deviyai thedu
Devikku thoodhu solla thendralae odu

Male : Kambanai koopidungal
Seedhaiyai kaanbaan
Kavi kalidasan
Aval sagunthalai enbaan

Male : Naayagiyae enathu kaaviya ellai
Naayagiyae enathu kaaviya ellai
Narai vizhunthaalum nenjil
Thirai vizhavillai
Narai vizhunthaalum nenjil
Thirai vizhavillai

Male : Dheivathin thaereduththu deviyai thedu
Devikku thoodhu solla thendralae odu

Male : ………………..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கற்பனைக்கு மேனி தந்து
கால் சலங்கை போட்டு விட்டேன்
கால் சலங்கை போன இடம்
கடவுளுக்கும் தோன்றவில்லை

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லை என்றால் நான் வெறும் கூடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லை என்றால் நான் வெறும் கூடு

ஆண் : பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாடிப் பறந்ததம்மா இளங்குயில் பேடு…..
இளங்குயில் பேடு…..ஊ……

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : நீர் வற்றிப் போனதென்று
நினைவினில் வெடிப்பு
நெஞ்சத்தில் தோன்றுதம்மா
வசந்தத்தின் துடிப்பு

ஆண் : மாமழை மேகம் இன்று
கண்களில் இருப்பு
மார்கழிப் பனியன்றோ
அவளது சிரிப்பு……
அவளது சிரிப்பு……ஊ……

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : கம்பனைக் கூப்பிடுங்கள்
சீதையைக் காண்பான்
கவி காளிதாசன் அவள்
சகுந்தலை என்பான்

ஆண் : கம்பனைக் கூப்பிடுங்கள்
சீதையைக் காண்பான்
கவி காளிதாசன்
அவள் சகுந்தலை என்பான்

ஆண் : நாயகியே எனது காவிய எல்லை
நாயகியே எனது காவிய எல்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில்
திரை விழவில்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில்
திரை விழவில்லை…….

ஆண் : தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆண் : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here