Singer : P. Susheela

Music by : K. H. Reddy

Lyrics by : A. Maruthakasi

Female : Haaa..aaa..aaa..aaa…
Karmumbaana en vaazhvu vembaanadhae
Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae
Karmumbaana en vaazhvu vembaanadhae
Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae

Female : Arumbaana aasaigal malaraagum naalil
Virumbaadha puyal vandhadheno
Arumbaana aasaigal malaraagum naalil
Virumbaadha puyal vandhadheno
Thirumbaadho inbam theeraadho thunbam
Thirumbaadho inbam theeraadho thunbam
Dhisai maarum padagaanen karai kaanbaeno

Female : Karmumbaana en vaazhvu vembaanadhae
Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae

Female : Nilaiyaana selvamae vilaiyaadum deivamae
Nee engae …un thandhai engae
Nilaiyaana selvamae vilaiyaadum deivamae
Nee engae un thandhai engae
Mazhaiyindri vaadum payiraanen ingae
Mazhaiyindri vaadum payiraanen ingae
Alai modhum kadal aanen nilai kaanbaeno

Female : Karmumbaana en vaazhvu vembaanadhae
Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹா..ஆஅ..ஆஅ…ஆஅ…ஆஅ…
கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே
கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே

பெண் : அரும்பான ஆசைகள் மலராகும் நாளில்
விரும்பாத புயல் வந்ததேனோ
அரும்பான ஆசைகள் மலராகும் நாளில்
விரும்பாத புயல் வந்ததேனோ
திரும்பாதோ இன்பம் தீராதோ துன்பம்
திரும்பாதோ இன்பம் தீராதோ துன்பம்
திசை மாறும் படகானேன் கரை காண்பேனோ

பெண் : கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே

பெண் : நிலையான செல்வமே விளையாடும் தெய்வமே
நீ எங்கே உன் தந்தை எங்கே
நிலையான செல்வமே விளையாடும் தெய்வமே
நீ எங்கே உன் தந்தை எங்கே
மழையின்றி வாடும் பயிரானேன் இங்கே
மழையின்றி வாடும் பயிரானேன் இங்கே
அலை மோதும் கடலானேன் நிலை காண்பேனோ

பெண் : கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here