Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Male : Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan

Male : Paaloottum podhilaval ninaithaala
Pillai bharatham kaakkum endru valarthaala
Paaloottum podhilaval ninaithaala
Pillai bharatham kaakkum endru valarthaala

Male : Thaalattu paatil adhai isaithaala
Pillai thaainaadu kaakum endru padithaala
Thaalattu paatil adhai isaithaala
Pillai thaainaadu kaakum endru padithaala

Male : Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan

Male : Kunguma poopoondra manamagalai
Than kulathukku vaazhvu tharum marumagalai
Kunguma poopoondra manamagalai
Than kulathukku vaazhvu tharum marumagalai

Male : Kannaara kaanbatharkku vaadi nindraal
Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal
Kannaara kaanbatharkku vaadi nindraal
Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal

Male : Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

பாடகர் :  சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

ஆண் : கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண் : பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா
பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா
பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா
பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா

ஆண் : தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா
பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா
தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா
பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா

ஆண் : வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண் : குங்குமப் பூப்போன்ற மணமகளை
தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை
குங்குமப் பூப்போன்ற மணமகளை
தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை

ஆண் : கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்
அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்
கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்
அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்

ஆண் : வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here