Singers : S. C. Krishnan and Chorus

Music by : R. Govarthanam

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Male : Karuppu kudaiyin keezhae
Kanyamudan arasaalum
Kavalan bangaaru
Chorus : Vaazhga
Male : Kannalae endha oru pennaiyum paaradha
Kalikaala beeshman naan
Chorus : Vaazhga
Male : Pazhamaiyai thagarthu pudhu nilaimaiyai
Bodhikkum pagutharivaalan naan
Chorus : Vaazhga vaazhga vaazhga

Female Chorus : Kanja raja petra pinju raja
Kanja raja petra pinju raja
Oru kaasukku kooda dhinam kenjum raja
Kanja raja petra pinju raja
Panja peigal naatil konji vilaiyaadudhu
Lanja peigal serndhu thaalam podudhu
Kanja raja petra pinju raja
Indha kanja raja petra pinju raja

Male : Hahahaaha …appadiya
Seri ungal kuraigalai sollungal

Male : Thari naadavai pol naanga paadapadum kooda
Yendaannnu kepparillae
Chorus : Thari naadavai pol naanga paadapadum kooda
Yendaannnu kepparillae
Enga pullakutti ezhu naala saapidavillae
Pattaadai naeithu vittu katta aadai illaama
Pattiniyaa kidappadhu naanga
Pattaadai naeithu vittu katta aadai illaama
Pattiniyaa kidappadhu naanga
Male : Engalai panjaiyaai nenaikkiradhu neenga
Chorus : Engalai panjaiyaai nenaikkiradhu neenga

Male : Vaazha pirandha naadu
Vaazha pirandha naadu
Ippo kozhaithanamaai pochae..ae
Varumai naale pengal
Thanmanathaiyae vittru
Iravu raanigal aaga engum thiriyalaachae…
Thiriyalaachae… thiriyalaachae…

Female Chorus : Nellu mission vandhadhaalae
Ulla pizhaippum pochu
Enga pullakutti ellaam
Ippo thollaipadalaachae
Nellu mission vandhadhaalae
Ulla pizhaippum pochu
Enga pullakutti ellaam
Ippo thollaipadalaachae

Male Chorus : Maada ulaichaalum mampattiya thenjaalum
Vaanam paatha seemaiyilae
Vayiru pizhaikka mudiyala
Chorus : Naanga vayiru pizhaikka mudiyala

Male : Karba thadai seiyalaamna oosi poda kaasu illa
Karba thadai seiyalaamna oosi poda kaasu illa
Governmentu hospathiriyil osi padukka kedaikkala
Governmentu hospathiriyil osi padukka kedaikkala
Operation seiya ..office permission kodukkala
Operation seiya ..office permission kodukkala
Vayasu aruvathu aayum manasa adakka mudiyala
Vayasu aruvathu aayum manasa adakka mudiyala

Male : Vaalu vaalu koluthavaalu vaalu indha
Varumaikku kaaranam sollu
Vaalu vaalu koluthavaalu vaalu indha
Varumaikku kaaranam sollu
Vattraadha jeevanadhi paaindhodum thennaadu
Valangundra kaaranam sollu
Vattraadha jeevanadhi paaindhodum thennaadu
Valangundra kaaranam sollu
Paalaivanam solaivanamaaagiyum naatilae
Pasi vandha kaaranam sollu
Pala kodi nottugal achadithum kooda
Pana kastam vandhadhen sollu

Male : Cinemaavil pochaa cellarichu pocha
Cinemaavil pochaa cellarichu pocha
Varumaithanai ottidavae vazhiyonnu sollu
Vaalu vaalu koluthavaalu vaalu indha
Varumaikku kaaranam sollu
Nee sollu karanam sollu

Male : Kalum yaeri kidaikkindra kaasu panamgalellam
Karaindhaal thaanae varumai theerum theerum ..oho
Kalum yaeri kidaikkindra kaasu panamgalellam
Karaindhaal thaanae varumai theerum theerum
Appo kattaayamaaga naanum engappa pettikku
Kadapaarai poda poren paarum paarum
Ippo kadapaarai poda poren paarum paarum

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : தஞ்சை. என். ராமைய்யா தாஸ்

ஆண் : கறுப்புக் குடையின் கீழ் கன்யமுடன் அரசாளும்
காவலன் பங்காரு
குழு : வாழ்க
ஆண் : கண்ணாலே எந்த ஒரு பெண்ணையும் பாராத
கலிகால பீஷ்மன் நான்
குழு : வாழ்க
ஆண் : பழமையை தகர்த்து புதுநிலையைக் போதிக்கும்
பகுத்தறிவாளன் நான்
குழு : வாழ்க வாழ்க வாழ்க

பெண் குழு : கஞ்ச ராஜா பெற்ற பிஞ்சு ராஜா
கஞ்ச ராஜா பெற்ற பிஞ்சு ராஜா
ஒரு காசுக்கு கூட தினம் கெஞ்சும் ராஜா
கஞ்ச ராஜா பெற்ற பிஞ்சு ராஜா
பஞ்சப் பேய்கள் நாட்டில் கொஞ்சி விளையாடுது
லஞ்சப் பேய்கள் சேர்ந்து தாளம் போடுது
கஞ்ச ராஜா பெற்ற பிஞ்சு ராஜா
இந்த கஞ்ச ராஜா பெற்ற பிஞ்சு ராஜா

ஆண் : வசனம் …..

ஆண் : தறி நாடாவைப் போல் நாங்க பாடாபட்டும் கூட
ஏண்டான்னு கேப்பாரில்லே
குழு : தறி நாடாவைப் போல் நாங்க பாடாபட்டும் கூட
ஏண்டான்னு கேப்பாரில்லே
எங்க புள்ளகுட்டி ஏழு நாளா சாப்பிடவில்லே
பட்டாடை நேத்து விட்டு கட்ட ஆடை இல்லாம
பட்டினியா கிடப்பது நாங்க
பட்டாடை நேத்து விட்டு கட்ட ஆடை இல்லாம
பட்டினியா கிடப்பது நாங்க

ஆண் : எங்களை பஞ்சையாய் நெனைக்கிறது நீங்க
குழு : எங்களை பஞ்சையாய் நெனைக்கிறது நீங்க

ஆண் : வாழ பிறந்த நாடு
வாழ பிறந்த நாடு
இப்போ கோழைத்தன்மை போச்சே ..ஏ
வறுமை நாளே பெண்கள்
தன்மானத்தையே விற்று
இரவு ராணிகள்ஆக எங்கும் திரியலாச்சே
திரியலாச்சே …திரியலாச்சே

பெண் : நெல்லு மிஷின் வந்ததாலே
உள்ள பிழைப்பும் போச்சு
எங்க புள்ளகுட்டி எல்லாம்
இப்போ தொல்லைப்படலாச்சே
நெல்லு மிஷின் வந்ததாலே
உள்ள பிழைப்பும் போச்சு
எங்க புள்ளகுட்டி எல்லாம்
இப்போ தொல்லைப்படலாச்சே

ஆண் : மாடா உழைச்சாலும் மம்பட்டியா தேஞ்சாலும்
வானம் பாத்தா சீமையிலே
வயிறு பிழைக்க முடியல
குழு : நாங்க வயிறு பிழைக்க முடியல

ஆண் : கர்ப தடை செய்யலாமா ஊசி போட காசு இல்ல
கர்ப தடை செய்யலாமா ஊசி போட காசு இல்ல
கவெர்மென்ட் ஆஸ்பத்திரியில் ஓசி படுக்க கிடைக்கல
கவெர்மென்ட் ஆஸ்பத்திரியில் ஓசி படுக்க கிடைக்கல
ஆபரேஷன் செய்ய ..ஆபீஸ் பெர்மிஸன் கொடுக்கல
ஆபரேஷன் செய்ய ..ஆபீஸ் பெர்மிஸன் கொடுக்கல
வயசு அறுவது ஆயும் மனச அடக்க முடியல
வயசு அறுவது ஆயும் மனச அடக்க முடியல

ஆண் : வாலு வாலு கொத்தவாழு வாலு
இந்த வறுமைக்கு காரணம் சொல்லு
வாலு வாலு கொத்தவாழு வாலு
இந்த வறுமைக்கு காரணம் சொல்லு
வற்றாத ஜீவநதி பாய்ந்தோடும் தென்னாடு
வளங்குன்றக் காரணம் சொல்லு
வற்றாத ஜீவநதி பாய்ந்தோடும் தென்னாடு
வளங்குன்றக் காரணம் சொல்லு
பாலைவனம் சோலைவனமாகியும் நாட்டிலே
பசி வந்த காரணம் சொல்லு
பல கோடி நோட்டுகள் அச்சடித்தும் கூட
பணக் கஷ்டம் வந்ததேன் சொல்லு

ஆண் : சினிமாவில் போச்சா செல்லரிச்சுப் போச்சா
சினிமாவில் போச்சா செல்லரிச்சுப் போச்சா
வறுமைதனை ஓட்டிடவே வழியொண்ணு சொல்லு
வாலு வாலு கொத்தவாழு வாலு
இந்த வறுமைக்கு காரணம் சொல்லு
நீ சொல்லு காரணம் சொல்லு

ஆண் : களும்பேறிக் கிடக்கின்ற காசு பணங்களெல்லாம்
கரைந்தால் தானே வறுமை தீரும்
களும்பேறிக் கிடக்கின்ற காசு பணங்களெல்லாம்
கரைந்தால் தானே வறுமை தீரும்
அப்போ கட்டாயமாக நானும் எங்கப்பா பெட்டிக்கு
கடப்பாரை போடப் போறேன் பாரும்….
இப்போ கடப்பாரை போடப் போறேன் பாரும்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here