Singer : Shyam

Music by : Shyam

Lyrics by : Kannadasan

Male : Kasukku kadai virippaal
Adhil kadhalai adagu vaippaal
Aasaiyai mudiththu vittaal thannai
Aadaiyil moodi kolvaan

Male : Uravukku orvarillai aval
Urimaikku thunaivan illai
Iravukku palar irunthaar
Aval idhayaththil evarumillai

Male : Avalo anbukku yaengi nindraal
Avano udalukku aasai vaiththaan
Udalai padaiththavanae unathu leelai idhu
Unnaasaiyaa….pennaasaiyaa….
Mannaasaiyaa…..manithan aasaigal…..

பாடகர் : சியாம்

இசையமைப்பாளர் : சியாம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காசுக்கு கடை விரிப்பாள்
அதில் காதலை அடகு வைப்பாள்
ஆசையை முடித்து விட்டால் தன்னை
ஆடையில் மூடிக் கொள்வாள்

ஆண் : உறவுக்கு ஒருவரில்லை அவள்
உரிமைக்கு துணைவன் இல்லை
இரவுக்கு பலர் இருந்தார் அவள்
இதயத்தில் எவருமில்லை

ஆண் : அவளோ அன்புக்கு ஏங்கி நின்றாள்
அவனோ உடலுக்கு ஆசை வைத்தான்
உடலைப் படைத்தவனே உனது லீலை இது
உன்னாசையா…பெண்ணாசையா
மண்ணாசையா….மனிதன் ஆசைகள்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here