Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa….
Kaaththoda sakthi illae
Kaaththadichchi ilai vizhunthaa….aa….
Kaaththoda sakthi illae
Ilai iruntha iruppu athu thangachi
Nee yaeththukkalae thoththuvidum un katchi

Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa….
Kaaththoda sakthi illae

Male : Aagaayaththai paaththu suttu
Adhula oru kili vizhunthaa
Appuramaa sutomunny perillae
Adhai adhirshtamunnu solluvaanga oorilae

Male : Unakku vantha neramathu uchaththula vachchathadi
Avanukkoru neram varum paaththukko
Appo avan koduththa adhaiyum
Neeyum vaangikko

Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa….
Kaaththoda sakthi illae

Male : Kovilukkul kulaththa vachchi
Kudaththukkullae vilakka vachci
Saaththuvathil magimai illae therinjukko
Adhai yaeththinaaththaan perumai varum purinjukko

Male : Gandhi mahan sirai irunthaar
Kannan avan adhil piranthaan
Gandhi mahan sirai irunthaar
Kannan avan adhil piranthaan
Gandhiyoda kannan enna thirudanaa
Antha kadavul enna unnai pola kurudanaa

Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa….
Kaaththoda sakthi illae

Male : Poi solli jeyichavarum
Poli porulai vittravarum
Ayyanidam oru samayam poganum
Appo avaridamthaan kanakku solli aaganum

Male : Poi solli jeyichavarum
Poli porulai vittravarum
Ayyanidam oru samayam poganum
Appo avaridamthaan kanakku solli aaganum

Male : Aaththukkullae thangangalai
Alli alli pottuvittaal
Pottavanthaan edukka venum
Keladi paava punniyaththai nampugira bhoomidi

Male : Kaaththadichchi ilai vizhunthaa….aa….
Kaaththoda sakthi illae
Ilai iruntha iruppu athu thangachi
Nee yaeththukkalae thoththuvidum un katchi
Ilai iruntha iruppu athu thangachi
Nee yaeththukkalae thoththuvidum un katchi

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ…..
காத்தோட சக்தி இல்லே
காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ…..
காத்தோட சக்தி இல்லே
இலை இருந்த இருப்பு அது தங்கச்சி
நீ ஏத்துக்கலே தோத்துவிடும் உன் கட்சி

ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ…..
காத்தோட சக்தி இல்லே

ஆண் : ஆகாயத்தை பாத்து சுட்டு
அதுல ஒரு கிளி விழுந்தா
அப்புறமா சுட்டோமுன்னு பேரில்லே
அதை அதிர்ஷ்டமுன்னு சொல்லுவாங்க ஊரிலே

ஆண் : உனக்கு வந்த நேரமது உச்சத்துல வச்சதடி
அவனுக்கொரு நேரம் வரும் பாத்துக்கோ
அப்போ அவன் கொடுத்த அதையும்
நீயும் வாங்கிக்கோ

ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ…..
காத்தோட சக்தி இல்லே

ஆண் : கோவிலுக்குள் குளத்த வச்சி
குடத்துக்குள்ளே விளக்க வச்சி
சாத்துவதில் மகிமை இல்லே தெரிஞ்சுக்கோ
அதை ஏத்தினாத்தான் பெருமை வரும் புரிஞ்சுக்கோ

ஆண் : காந்தி மகான் சிறை இருந்தார்
கண்ணன் அவன் அதில் பிறந்தான்
காந்தி மகான் சிறை இருந்தார்
கண்ணன் அவன் அதில் பிறந்தான்
காந்தியோட கண்ணன் என்ன திருடனா
அந்தக் கடவுள் என்ன உன்னைப் போல குருடனா

ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ…..
காத்தோட சக்தி இல்லே

ஆண் : பொய் சொல்லி ஜெயிச்சவரும்
போலி பொருளை விற்றவரும்
அய்யனிடம் ஒரு சமயம் போகணும்
அப்போ அவரிடம்தான் கணக்கு சொல்லி ஆகணும்

ஆண் : பொய் சொல்லி ஜெயிச்சவரும்
போலி பொருளை விற்றவரும்
அய்யனிடம் ஒரு சமயம் போகணும்
அப்போ அவரிடம்தான் கணக்கு சொல்லி ஆகணும்

ஆண் : ஆத்துக்குள்ளே தங்கங்களை
அள்ளி அள்ளி போட்டுவிட்டால்
போட்டவன்தான் எடுக்க வேணும்
கேளடி பாவ புண்ணியத்தை நம்புகிற பூமிடி

ஆண் : காத்தடிச்சி இலை விழுந்தா….ஆ…..
காத்தோட சக்தி இல்லே
இலை இருந்த இருப்பு அது தங்கச்சி
நீ ஏத்துக்கலே தோத்துவிடும் உன் கட்சி
இலை இருந்த இருப்பு அது தங்கச்சி
நீ ஏத்துக்கலே தோத்துவிடும் உன் கட்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here