Singers : P. B. Sreenivas, J. P. Chandrababu, P. Susheela and L. R. Eswari

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Humming : ………

Male : Kadhal enbadhu edhuvarai
Male : Kalyana kaalam varumvarai
Male : Kalyanam enbadhu edhuvarai
Male : Kazhuthinil thaali vizhumvarai

Male : Aahaa kadhal enbadhu edhuvarai
Male : Kalyana kaalam varumvarai
Male : Kalyanam enbadhu edhuvarai
Male : Kazhuthinil thaali vizhumvarai

Male : Pennuku ilamai edhuvarai
Male : Pillaigal pirandhu varumvarai
Male : Kannuku azhagu edhuvarai
Male : Kaiyil kidaikum naalvarai

Male : Aahaa kadhal enbadhu edhuvarai
Male : Kalyana kaalam varumvarai
Male : Kalyanam enbadhu edhuvarai
Male : Kazhuthinil thaali vizhumvarai

Female : Kadhal kondaale aadavargal paavam
Budhi sollaamal kollaamal pogum
Kadhal kondaale aadavargal paavam
Budhi sollaamal kollaamal pogum

Female : Avarai kandaale oor muzhudhum pesum
Thotram kaalvaasi paithiyampol aagum
Avarai kandaale oor muzhudhum pesum
Thotram kaalvaasi paithiyampol aagum

Male : Andha paithiyathai theerpadharku marundhu
Pengal paarvaiyile oorivarum virundhu
Andha paithiyathai theerpadharku marundhu
Pengal paarvaiyile oorivarum virundhu

Male : Indha vaithiyargal pakkathile irundhu
Kannai vaithu vittaal noi pogum parandhu
Indha vaithiyargal pakkathile irundhu
Kannai vaithu vittaal noi pogum parandhu

Male : Aahaa kadhal enbadhu edhuvarai
Male : Kalyana kaalam varumvarai
Male : Kalyanam enbadhu edhuvarai
Male : Kazhuthinil thaali vizhumvarai

Female : Pengal aadaiyinai azhagu seiyumbodhum
Adhai aasai endru pinnaale odum
Pengal aadaiyinai azhagu seiyumbodhum
Adhai aasai endru pinnaale odum

Female : Indha kaalaiyarin ullam dhinam maarum
Ivar kaadhalile perumai enna vaazhum
Indha kaalaiyarin ullam dhinam maarum
Ivar kaadhalile perumai enna vaazhum

Male : Endrum maaraadhu naangal konda kadhal
Engal kadhal poyin kadhal poyin saadhal
Endrum maaraadhu naangal konda kadhal
Engal kadhal poyin kadhal poyin saadhal

Male : Idhil aadhaaram vendum endraal paaru
Andha ambigaabadhi kadhaiyai kelu
Andha ambigaabadhi kadhaiyai kelu

Male : Aahaa kadhal enbadhu edhuvarai
Male : Kalyana kaalam varumvarai
Male : Kalyanam enbadhu edhuvarai
Male : Kazhuthinil thaali vizhumvarai

பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீனிவாஸ், ஜே. பி. சந்திரபாபு, பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : …….

ஆண் : காதல் என்பது எது வரை
ஆண் : கல்யாண காலம் வரும் வரை
ஆண் : கல்யாணம் என்பது எது வரை
ஆண் : கழுத்தினில் தாலி விழும் வரை

ஆண் : ஆஹா.. காதல் என்பது எது வரை
ஆண் : கல்யாண காலம் வரும் வரை
ஆண் : கல்யாணம் என்பது எது வரை
ஆண் : கழுத்தினில் தாலி விழும் வரை

ஆண் : பெண்ணுக்கு இளமை எது வரை
ஆண் : பிள்ளைகள் இரண்டு வரும் வரை
ஆண் : கண்ணுக்கு அழகு எது வரை
ஆண் : கையில் கிடைக்கும் நாள் வரை..

ஆண் : ஆஹா.. காதல் என்பது எது வரை
ஆண் : கல்யாண காலம் வரும் வரை
ஆண் : கல்யாணம் என்பது எது வரை
ஆண் : கழுத்தினில் தாலி விழும் வரை

பெண் : காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்
காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்

பெண் : அவரைக் கண்டாலே ஊர் முழுதும் பேசும்
தோற்றம் கால் வாசி பைத்தியம் போல் ஆகும்
அவரைக் கண்டாலே ஊர் முழுதும் பேசும்
தோற்றம் கால் வாசி பைத்தியம் போல் ஆகும்

ஆண் : அந்தப் பைத்தியத்தைத் தீர்ப்பதற்கு மருந்து
பெண்கள் பார்வையிலே ஊறி வரும் விருந்து
அந்தப் பைத்தியத்தைத் தீர்ப்பதற்கு மருந்து
பெண்கள் பார்வையிலே ஊறி வரும் விருந்து

ஆண் : இந்த வைத்தியர்கள் பக்கத்திலே இருந்து
கண்ணை வைத்து விட்டால் நோய் போகும் பறந்து..
இந்த வைத்தியர்கள் பக்கத்திலே இருந்து
கண்ணை வைத்து விட்டால் நோய் போகும் பறந்து..

ஆண் : ஆஹா.. ..ஹா..காதல் என்பது எது வரை
ஆண் : கல்யாண காலம் வரும் வரை
ஆண் : கல்யாணம் என்பது எது வரை
ஆண் : கழுத்தினில் தாலி விழும் வரை

பெண் : பெண்கள் ஆடையினை அழகு செய்யும் போதும்
அதை ஆசை என்று பின்னாலே ஓடும்
பெண்கள் ஆடையினை அழகு செய்யும் போதும்
அதை ஆசை என்று பின்னாலே ஓடும்

பெண் : இந்தக் காளையரின் உள்ளம் தினம் மாறும்
இவர் காதலிலே பெருமை என்ன வாழும் ?
இந்தக் காளையரின் உள்ளம் தினம் மாறும்
இவர் காதலிலே பெருமை என்ன வாழும் ?

ஆண் : என்றும் மாறாது நாங்கள் கொண்ட காதல்
எங்கள் காதல் போயின் காதல் போயின் சாதல்
என்றும் மாறாது நாங்கள் கொண்ட காதல்
எங்கள் காதல் போயின் காதல் போயின் சாதல்

ஆண் : இதில் ஆதாரம் வேண்டுமென்றால் பாரு
அந்த அம்பிகாபதி கதையைக் கேளு..
அந்த அம்பிகாபதி கதையைக் கேளு..

ஆண் : ஆஹா.. காதல் என்பது எது வரை
ஆண் : கல்யாண காலம் வரும் வரை
ஆண் : கல்யாணம் என்பது எது வரை
ஆண் : கழுத்தினில் தாலி விழும் வரை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here