Singer :  T. R. Mahalingam

Music by : Vishwanathan – Ramamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male : Kallaal idhayam veithu
Kadum vishathaal kann amaithu
Kanakkillaa poigalukku
Kaaranamaai naakamaithu
Kalla uruvamaithu
Kanna kol kaiyamaithu
Nallvar endrae silarai
Ulagam nadamaada vittadhada..aaa..aaa..

Male : Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal

Male : Needhiyin edhirigalaai
nilaimaari thiribavargal..aaa..aaa…
Needhiyin edhirigalaai
nilaimaari thiribavargal.
Paadhaiyil nadappadhillai
paramanaiyum madhippadhillai
Paadhagam konjam millai
panbumillai muraiyum illai
Paadhagam konjam millai
panbumillai muraiyum illai
Paedhai pengal idhai
perumbaalum unarvadhillai

Male : Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal

Male : Baedham illai enbaar
vedhaandham pesiduvaar
Baedham illai enbaar
vedhaandham pesiduvaar
Pettravalai thaai enbaar
mattravalai paei enbaar
Kaadhal aram enbaar
karpin vilai ennavenbaar
Kaadhal aram enbaar
karpin vilai ennavenbaar
Kannmoodi maandhar idhai
kadaisi varai arivadhillai

Male : Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆண் : கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை
உலகம் நடமாட விட்டதடா..ஆ..ஆஅ..

ஆண் : காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்

ஆண் : நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப் பெண்கள்
இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை

ஆண் : காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்

ஆண் : பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைத் தாயென்பார் ப் பேயென்பார்
மற்றவளைப் பேயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர்
இதை கடைசிவரை அறிவதில்லை

ஆண் : காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here