Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Kaaththirunthaen kattiyanaikka
Kanni idhazhil muthu pathikka
Kaaththirunthaen kattiyanaikka
Kanni idhazhil muthu pathikka
Innum enna thatti kazhikka
Idhayam undu kottiyalakka

Female : Vaari kodukkum vanji manathu
Vaanga thudikkum nenjam unathu
Vaari kodukkum vanji manathu
Vaanga thudikkum nenjam unathu
Ondrai ondru pinni kondathu
Uravil inbam alli thanthathu

Female : Kaaththirunthaen kattiyanaikka
Male : Kanni idhazhil muthu pathikka

Male : Poonthugil moodiya
Paingkili maeniyai
Naan thodum velaiyil
Naanam piranthathu yaen yaen yaen….

Female : Maadhulam enbathu
Maangani pondrathu
Kadhalan kai pada pongi
Vazhinthathu thaen thaen thaen….

Male : Thaen suvaiyo
Illai maan suvaiyo
Endru naan thudithaen
Intha velaiyilae

Female : Naan tharavo
Illai nee tharavo
Ena yaengi nindrean anthi maalaiyilae

Male : Kaaththirunthaen kattiyanaikka
Female : Kanni idhazhil muthu pathikka

Female : Maanidai ooridum
Thiraatchaiyai pol
Iru sael idai paarththathum
Kadhal piranthatho sol sol sol

Male : Paatharasam ena
Odidum parvaiyil
Kadhal rasam tharum kanni
En arugae nil nil nil

Female : Aaththiramo illai
Avasaramo enai
Anaiththidavae intha naadagamo…

Male : Nee arivaai
Adhai naan arivaen
Idhil kelvigal nooru ketkanumo

Female : Kaaththirunthaen kattiyanaikka
Male : Kanni idhazhil muthu pathikka
Female : Innum enna thatti kazhikka
Male : Idhayam undu kottiyalakka
Both : Kaaththirunthaen kattiyanaikka

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : காத்திருந்தேன் கட்டியணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க…
காத்திருந்தேன் கட்டியணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க…
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டியளக்க…

பெண் : வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது…
வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது…
ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது
உறவில் இன்பம் அள்ளித் தந்தது…

பெண் : காத்திருந்தேன் கட்டியணைக்க
ஆண் : கன்னி இதழில் முத்து பதிக்க…

ஆண் : பூந்துகில் மூடிய
பைங்கிளி மேனியை
நான் தொடும் வேளையில்
நாணம் பிறந்தது ஏன் ஏன் ஏன்…

பெண் : மாதுளம் என்பது
மாங்கனி போன்றது
காதலன் கைப் பட பொங்கி
வழிந்தது தேன் தேன் தேன்…

ஆண் : தேன் சுவையோ
இல்லை மான் சுவையோ
என்று நான் துடித்தேன்
இந்த வேளையிலே…….

பெண் : நான் தரவோ
இல்லை நீ தரவோ என
ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே

ஆண் : காத்திருந்தேன் கட்டியணைக்க
பெண் : கன்னி இதழில் முத்து பதிக்க…

பெண் : மானிடை ஊறிடும்
திராட்சையை போல்
இரு சேல் இடை பார்த்ததும்
காதல் பிறந்ததோ சொல் சொல் சொல்…

ஆண் : பாதரசம் என
ஓடிடும் பார்வையில்
காதல் ரசம் தரும் கன்னி
என் அருகே நில் நில் நில்…

பெண் : ஆத்திரமோ இல்லை
அவசரமோ எனை
அணைத்திடவே இந்த நாடகமோ…

ஆண் : நீ அறிவாய்
அதை நான் அறிவேன்
இதில் கேள்விகள் நூறு கேட்கணுமோ

பெண் : காத்திருந்தேன் கட்டியணைக்க
ஆண் : கன்னி இதழில் முத்து பதிக்க…
பெண் : இன்னும் என்ன தட்டிக் கழிக்க
ஆண் : இதயம் உண்டு கொட்டியளக்க.
இருவர் : காத்திருந்தேன் கட்டியணைக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here