Singer : R. Muthuraman
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Poovai Sengkuttuvan
Male : Kaththu thiraikadal soozhavanikoru
Kanmani pondravanae
Karpaga naadan eppuram menmai
Kanakkilaa vaainthavanae
Male : Muththamizhai payil viththagar naavil
Nulainthidu naayaganae
Moovulagum pugazh chozhaparanthaga
Vaazhiya vaazhiyavae
Male : Manaththaal thanaithaan madhippaai
Ninaipaar thamakkae virumpaanavan
Serukkaal orukkaal sinaththaal
Verupaar kudikkae neruppanavan
Male : Gunaththaal kulaththaal inaththal
Maraththaal thiraththaal sirappaanavan
Koduppaar enaththaan aruththaar
Thamai penum kulasegaran vaazhgavae
Male : Por munaiyil pugazg seran mudithalai
Poyurena perum veeram vilathanai
Puli varaintha kodi asaiyumun
Pagaivar mudi thuranthu unathu adipanithiduva
Male : Ponni valanaadu kanni tamil veedu
Ennum pugalodu inba niraivodu
Vaazhga vaazhga veera chozha rajarajan vaazhgavae
பாடகர் : ஆர். முத்துராமன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
ஆண் : கத்துத் திரைக்கடல் சூழவனிக்கொரு
கண்மணி போன்றவனே
கற்பக நாடன் எப்புறம் மேன்மை
கணக்கிலா வாய்ந்தவனே
ஆண் : முத்தமிழை பயில் வித்தகர் நாவில்
நுழைந்திடு நாயகனே
மூவுலகும் புகழ் சோழப்பராந்தக
வாழிய வாழியவே
ஆண் : மனத்தால் தனைத்தான் மதிப்பாய்
நினைப்பார் தமக்கே விருப்பானவன்
செருக்கால் ஒருக்கால் சினத்தால்
வெறுப்பார் குடிக்கே நெருப்பானவன்
ஆண் : குணத்தால் குலத்தால் இனத்தால்
மறத்தால் திறத்தால் சிறப்பானவன்
கொடுப்பார் எனத்தான் அடுத்தார்
தமைப் பேணும் குலசேகரன் வாழ்கவே
ஆண் : போர் முனையில் புகழ் சேரன் முடிதலை
போயுரென பெரும் வீரம் விளத்தனை
புலி வரைந்த கொடி அசையு முன்
பகைவர் முடி துறந்து உனது அடிப்பணிந்திடுவ
ஆண் : பொன்னி வளநாடு கன்னித் தமிழ் வீடு
என்னும் புகழோடு இன்ப நிறைவோடு
வாழ்க வாழ்க வீர சோழ ராஜராஜன் வாழ்கவே