Singer : Anurag Kulkarni
Music by : Sweekar Agasthi
Lyrics by : Karthik Netha
Male : Kaatril aadum deepam oyaadhe
Kaatrum theerndhaal aattam podaathe
Odum neeril veezhum thuralgal
Kai serumo
Yaarai thedi yaarin yekkangal
Kaanum yaavum theera paadangal
Maarum kaalam maatrum neratthil veraagumo…
Male : Oo theera theera
Kelvi pandhaadume ooyaathe………
Humming : Thoorutthutthu thu
Roo ruru ru ru oo…
Male : Rekkai katti ee poginrathe
Paathaiyaai theeppori
Oorsendru sernthidumo…?
Male : Kannu kutti rendu
Kannaikatti kondu
Kandabadi ingu ododa…
Ye thaakum naalaiye
Ye ye patchamannu onnu…
Ichha unmaiyinnu
Utchu kottikittu poraada…
Yethaagum paathaiye
Male : Vaikolai poovaakki…
Poovaasam kettaale veesaathe eppothume…
Thundil nooru pottaal enna
Kaatrum mattaathammaa oo oo…
Male : Oo theera theera
Kelvi pandhaadume ooyaathe………
Male : Kaatril aadum deepam oyaadhe
Kaatrum theerndhaal aattam podaathe
Odum neeril veezhum thuralgal
Kai serumo
Female : Oornoolile poo aaduthe
Yaar aasai pol aadi veezhumo..?
Yaar theendave poo yengutho
Yekathin kaambile vaadi pogumo..?
Male : Thanni antha pakkam…
Kanni intha pakkam
Natta naduvile maan kutti
Poraadi paarkume
Kannu thannikulla…
Satthu onnumilla
Vittu viduthala neeyaaki…
Ponaale pothume
Yeppothum yemaali…
Kanneerin komali aasaigal eederumaa..?
Paasam kaatti…
Mosam vaangum
Vaazhkaithaan maarumaa..?
Male : Oo theera theera
Kelvi pandhaadume ooyaathe………
Theranaane naane naanena…
Theranaane naane naanena
Thaara thaara thaare raarare thaaraararaa
பாடகர் : அனுராக் குல்கர்னி
இசை அமைப்பாளர் : ஸ்வீக்கார் அகஸ்தி
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : காற்றில் ஆடும் தீபம் ஓயாதே
காற்றும் தீர்ந்தால் ஆட்டம் போடாதே
ஓடும் நீரில் வீழும் தூறல்கள்
கை சேருமோ
யாரை தேடி யாரின் ஏக்கங்கள்
காணும் யாவும் தீரா பாடங்கள்
மாறும் காலம் மாற்றும் நேரத்தில் வேறாகுமோ…
ஆண் : ஓ தீரா தீரா
கேள்வி பந்தாடுமே ஓயாதே…….
முனங்கல் : .…………..
ஆண் : ரெக்கை கட்டி ஈ போகிறதே
பாதையாய் தீப்பொறி
ஊர்சென்று சேர்ந்திடுமோ…?
ஆண் : கண்ணு குட்டி ரெண்டு
கண்ணைக்கட்டி கொண்டு
கண்டபடி இங்கு ஓடோட..
யே தாக்கும் நாளையே
ஏய் ஏய் பட்சமண்ணு ஒண்ணு…
இச்ச உண்மையின்னு
உச்சு கொட்டிகிட்டு போராட
ஏதாகும் பாதையே
ஆண் : வைக்கோலை பூவாக்கி…
பூவாசம் கேட்டாலே வீசாதே எப்போதுமே…
தூண்டில் நூறு போட்டால் என்ன
காற்றும் மாட்டாதம்மா ஓ ஓ ஓ…
ஆண் : ஓ தீரா தீரா
கேள்வி பந்தாடுமே ஓயாதே…….
முனங்கல் : ……………
ஆண் : காற்றில் ஆடும் தீபம் ஓயாதே
காற்றும் தீர்ந்தால் ஆட்டம் போடாதே
ஓடும் நீரில் வீழும் தூறல்கள்
கை சேருமோ
பெண் : ஓர் நூலிலே பூ ஆடுதே
யார் ஆசை போல் ஆடி வீழுமோ..?
யார் தீண்டவே பூ ஏங்குதோ
ஏக்கத்தின் காம்பிலே வாடி போகுமோ..?
ஆண் : தண்ணி அந்த பக்கம்…
கன்னி இந்த பக்கம்
நட்ட நடுவிலே மான் குட்டி
போராடி பார்க்குமே
கண்ணு தண்ணிக்குள்ள…
சத்து ஒண்ணுமில்ல
விட்டு விடுதலை நீயாகி…
போனாலே போதுமே
எப்போதும் ஏமாளி…
கண்ணீரின் கோமாளி ஆசைகள் ஈடேறுமா..?
பாசம் காட்டி…
மோசம் வாங்கும்
வாழ்கைதான் மாறுமா..?”
ஆண் : ஓ தீரா தீரா
கேள்வி பந்தாடுமே ஓயாதே…….
தீரானானே நானே நானேனா…
தீரானானே நானே நானேனா
தாரா தாரா தாரே ராராரே தாராராரா