Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Female : …………….

Female : Kavithai naan kavingan nee
Kalaigal naan rasigan nee
Kanigal naan paravai nee
Kalyaanam yaarodu nadanthaalenna

Female : Kavithai naan kavingan nee

Male : Kettathundu palavagai kadhal
Paarththathillai yaezhai en vaazhvil
Kettathundu palavagai kadhal
Paarththathillai yaezhai en vaazhvil

Female : Enna vendum naan tharuvaenae
Enna vendum naan tharuvaenae
Ennai uravaaga ninaiththaal enna

Female : Kavithai naan kavingan nee

Male : Manjal vaanam mangala nilavu
Konjam pozhuthu aayiram kanavu
Female : Manjam ingae vanjiyum ingae
Manjam ingae vanjiyum ingae
Nenjam udalodu kalanthaalenna

Female : Kavithai naan kavingan nee

Male : Pachai thottam paavai un maeni
Paadi parakkum naan oru thaenee
Pachai thottam paavai un maeni
Paadi parakkum naan oru thaenee

Female : Achcham maranthaen ahh naananum maranthaen
Achcham maranthaen naananum maranthaen
Antha ulagangal piranthaalenna

Male : Kavithai nee kavingan naan
Kaligal nee rasigan naan
Kanigal nee paravai naan
Kalyaanam yaarodu nadanthaalenna

Female : Kavithai naan kavingan nee

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : லாலாலலா….லாலாலலா….லாலாலலா
லாலாலலா….லாலாலலா….லாலாலலா

பெண் : கவிதை நான் கவிஞன் நீ
கலைகள் நான் ரசிகன் நீ
கனிகள் நான் பறவை நீ
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

பெண் : கவிதை நான் கவிஞன் நீ

ஆண் : கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்
கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்

பெண் : என்ன வேண்டும் நான் தருவேனே
என்ன வேண்டும் நான் தருவேனே
என்னை உறவாக நினைந்தால் என்ன

பெண் : கவிதை நான் கவிஞன் நீ….

ஆண் : மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு
பெண் : மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே
மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே
நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன

பெண் : கவிதை நான் கவிஞன் நீ

ஆண் : பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ
பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ

பெண் : அச்சம் மறந்தேன் அஹ் நாணமும் மறந்தேன்
அச்சம் மறந்தேன் நாணமும் மறந்தேன்
அந்த உலகங்கள் பிறந்தாலென்ன

ஆண் : கவிதை நீ கவிஞன் நான்
கலைகள் நீ ரசிகன் நான்
கனிகள் நீ பறவை நான்
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

பெண் : கவிதை நான் கவிஞன் நீ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here