Singer : K. S. Chithra

Music by : Bharathwaj

Female : Kavingyan kavingyan
Bhaarathi kettaan
Kaani nilaththil oru veedu
Kavingyan vazhiyil naanum ketten
Kavidhai vaazhum siruveedu
Siruveedu siruveedu
Siruveedu siruveedu

Female : Oru pakkam nadhiyil osai
Oru pakkam kuyilin bhaashai
Ilam thennayin keetru
Jennalai urasum thiruveedu

Female : Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae
Siru thennanguyilgal paadi ezhuppivida
Thendral vandhu vaasal theliththuvida
Kottum pookkal kolam varaiyumpadi
Virumbudhae…

Female : Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

Chorus : Thakka theemtha theemtha
Thirathirana…(7)
Thakka theemtha theemtha
Thirathira thira thira thiranaa

Female : Kanaakkandu thoongum varayil
Nilaa vandhu kadhaigal solla
Kannaadi muttram ondru vendumae

Female : Minnal vandhu theendumbodhu
Vetkkam vandhu moodikkolla
Kangalaaga jodi jannal vendumae

Female : Parandhodum paravai koottam
Iravodu thangichella
Maragadha maadam ondru vendumae

Female : Kolusoliyum kolusoliyum
Sirippoliyum sirippoliyum
Yedhiroliththu yedhiroliththu
Isai varanum

Female : Indha vaasal vandhaal
Kobam theerumpadi
Veesum kaatril aayul koodumpadi
Pesum vaarththai kavidhai aagumpadi
Virumbudhae..

Female : Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

Female : Kodaikaala megam vandhu
Mottaimaadi melae nindru
Kudithanneer pozhiyumbadi vendumae

Female : Vaazhndhavargal kadhayaicholli
Varungaala kanavai enni
Oonjalaada thinnai rendu vendumae

Female : Thalaimurai maarumpodhum
Parambarai thaangum vannam
Thanga mani thoongal
Ezhu vendumae

Female : Silar ninaivaai
Perum kanavaai
Aranmanayaai adhisayamaai
Idhu varumo

Female : Nallaar kangal kandu potrumpadi
Pollaar manasum nindru vaazhthumpadi
Yellaa uravum vandhu vaazhumpadi
Virumbudhae..

Female : Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae
Siru thennanguyilgal paadi ezhuppivida
Thendral vandhu vaasal theliththuvida
Kottum pookkal kolam varaiyumpadi
Virumbudhae…

Female : Virumbudhae manasu virumbudhae
Virumbudhae manasu virumbudhae

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : கவிஞன் கவிஞன்
பாரதி கேட்டான் காணி
நிலத்தில் ஒரு வீடு கவிஞன்
வழியில் நானும் கேட்டேன்
கவிதை வாழும் சிறு வீடு
சிறு வீடு சிறு வீடு சிறு
வீடு சிறு வீடு

பெண் : ஒரு பக்கம் நதியில்
ஓசை ஒரு பக்கம் குயிலின்
பாஷை இளம் தென்னையின்
கீற்று ஜன்னலை உரசும்
திருவீடு

பெண் : விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே சிறு
தென்னங்குயில்கள் பாடி
எழுப்பிவிட தென்றல் வந்து
வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம்
வரையும்படி விரும்புதே

பெண் : விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே

குழு : தக தீம்த தீம்த
திர திரனா (7)
தக தீம்த தீம்த திரதிர
திர திர திரனா

பெண் : கனா கண்டு தூங்கும்
வரையில் நிலா வந்து
கதைகள் சொல்ல கண்ணாடி
முற்றம் ஒன்று வேண்டுமே

பெண் : மின்னல் வந்து
தீண்டும் போது வெட்கம்
வந்து மூடிக்கொள்ள
கண்களாக ஜோடி
ஜன்னல் வேண்டுமே

பெண் : பறந்தோடும்
பறவை கூட்டம் இரவோடு
தங்கி செல்ல மரகத மாடம்
ஒன்று வேண்டுமே

பெண் : கொலுசொலியும்
கொலுசொலியும் சிரிப்பொலியும்
சிரிப்பொலியும் எதிரொளித்து
எதிரொளித்து இசை வரனும்

பெண் : இந்த வாசல்
வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள்
கூடும்படி பேசும் வார்த்தை
கவிதை ஆகும்படி விரும்புதே

பெண் : விரும்புதே
மனசு விரும்புதே
விரும்புதே மனசு
விரும்புதே

பெண் : கோடைகால
மேகம் வந்து மொட்டை
மாடி மேலே நின்று
குடிதண்ணீர் பொழியும்படி
வேண்டுமே

பெண் : வாழ்ந்தவர்கள்
கதையை சொல்லி
வருங்கால கனவை
எண்ணி ஊஞ்சலாட
திண்ணை ரெண்டு
வேண்டுமே

பெண் : தலைமுறை
மாறும்போதும் பரம்பரை
தாங்கும் வண்ணம் தங்க
மணி தூண்கள் ஏழு
வேண்டுமே

பெண் : சிலர் நினைவாய்
பெரும் கனவாய்
அரண்மனையாய்
அதிசயமாய் இது வருமோ

பெண் : நல்லார் கண்கள்
கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று
வாழ்த்தும்படி எல்லா உறவும்
வந்து வாழும்படி விரும்புதே

பெண் : விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே சிறு
தென்னங்குயில்கள் பாடி
எழுப்பிவிட தென்றல் வந்து
வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம்
வரையும்படி விரும்புதே

பெண் : விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here