Singer : P. U. Chinnappa

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Male : Kaelimiga cheivaal
Kaettadhellaan thaan tharuvaal
Kaelimiga cheivaal
Kaettadhellaan thaan tharuvaal
Vaelaigalai seidhu kondae
Vaedikkai kaattiduvaal
Vaelaigalai seidhu kondae
Vaedikkai kaattiduvaal
Yaenadi nee naettriravu yaen
Kobam kondaa endraal
Yaenadi nee naettriravu yaen
Kobam kondaa endraal
Yaeriyilae meen pidithaen
Pal novu vandhadhenbaal

Male : Veettilae endraikkum
Oyaamal uzhaithiduvaal
Veettilae endraikkum
Oyaamal uzhaithiduvaal
Paattilae ulla mellaam
Parikoduthaen paarumenbaal
Paattilae ulla mellaam
Parikoduthaen paarumenbaal

Male : Kittatthil vandhu nindru
Otti otti paesiduvaal
Kittatthil vandhu nindru
Otti otti paesiduvaal
Kitti anaindhidilo
Etti nindru paesu menbaal
Kitti anaindhidilo
Etti nindru paesu menbaal

Male : Maadhavalaal kandasugam
Miga undu kandeer
Maadhavalaal kandasugam
Miga undu kandeer
Maadhargalillaamalindha
Maanilathil vaazhvumillai
Maadhargalillaamalindha
Maanilathil vaazhvumillai

Male : Munn vinaiyaal naanum
Manamudaindhu vaadugaiyil
Munn vinaiyaal naanum
Manamudaindhu vaadugaiyil
Maadhavalai kandaen
Maaladhi naan endraal
Maadhavalai kandaen
Maaladhi naan endraal

Male : Kattazhagu ulla udal
Kannilae nalla gunam…mm..mm…mm…
Kaana kan koosum karum kuzhalaal
Oppuyarvattra oyyaara nadaiyudanae…ae..ae…
Enaikkandu kaaranamun kaettu
Oorum paerum oliyaamal koorumendraal

Male : Pasiyaara chorillai
Paduthuranga veedillai…ee…ee..
Nasithidindha sathirathil
Naan poi paduthirundhaen
Nadu nisiyil paei koottam
Varakkandu bayandhu…ee…ee…
Odinaen odi olindhaen
Ammammaa unai naan kandaen…
Naan unaik kandaen

Male : Thaali kattum pendaatti
Thangu thadai yaedhumillai
Thaali kattum pendaatti
Thangu thadai yaedhumillai
Naanor anaadhai naadhi
Yaedhu millaadhavan
Naanor anaadhai naadhi
Yaedhu millaadhavan
Aana thuyaru kalavillai
Aana thuyaru kalavillai
Aadharithaal podhu mendraen

Male : Andrumudhal naangal
Anbaalinaindhu vittom
Nagarathu veedhigalil gaganathu
Kannigai pol
Aval aaduvaal

Male : Naan paaduvaen ambigai munn
Naan pala aanaigal ittapinnar
Nambikkai kondaal andha
Naayagiyai naan manandhaen

Male : Aval kaana kidaikkaadha thangam
Aval kaana kidaikkaadha thangam
Maadhavalai naan peravae
Enna thavam seidhu vittaen
Maadhavalai naan peravae
Enna thavam seidhu vittaen
Kaana kidaikkaadha thangam

Male : Inbamudan vaazhkkaiyilae
Ilavarasithanai kandu
En manam parikoduthaen
Innalgal pala naerumendru
Iyambinaal needhi pala sonnaal
Niyaayam kaettaal
Azhudhaal pulambinaal
Adithu thurathivittaen
Enniru kannin maniyaai
Udhitha maamaniyae
Maniyae en anbae amudhae
En aasai pokkishamae
Panbae paarinil pathini rathinamae
Indrunai pirindhaen
Indrunai pirindhaen
Indrunai pirindhaen…

பாடகர் : பு. உ. சின்னப்பா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

ஆண் : கேலிமிகச் செய்வாள்
கேட்டதெல்லாந் தான் தருவாள்
கேலிமிகச் செய்வாள்
கேட்டதெல்லாந்தான் தருவாள்
வேலைகளைச் செய்து கொண்டே
வேடிக்கை காட்டிடுவாள்
வேலைகளைச் செய்து கொண்டே
வேடிக்கை காட்டிடுவாள்
ஏனடி நீ நேற்றிரவு ஏன்
கோபம் கொண்டா யென்றால்
ஏரியிலே மீன் பிடித்தேன்
பல் நோவு வந்ததென்பாள்

ஆண் : வீட்டிலே என்றைக்கும்
ஓயாமல் உழைத்திடுவாள்
வீட்டிலே என்றைக்கும்
ஓயாமல் உழைத்திடுவாள்
பாட்டிலே உள்ள மெல்லாம்
பறிகொடுத்தேன் பாருமென்பாள்
பாட்டிலே உள்ள மெல்லாம்
பறிகொடுத்தேன் பாருமென்பாள்

ஆண் : கிட்டத்தில் வந்து நின்று
ஒட்டி ஒட்டிப் பேசிடுவாள்
கிட்டத்தில் வந்து நின்று
ஒட்டி ஒட்டிப் பேசிடுவாள்
கிட்டி அணைந்திடிலோ
எட்டி நின்று பேசு மென்பாள்
கிட்டி அணைந்திடிலோ
எட்டி நின்று பேசு மென்பாள்

ஆண் : மாதவளால் கண்டசுகம்
மிக உண்டு கண்டீர்
மாதவளால் கண்டசுகம்
மிக உண்டு கண்டீர்
மாதர்களில்லாமலிந்த
மானிலத்தில் வாழ்வுமில்லை
மாதர்களில்லாமலிந்த
மானிலத்தில் வாழ்வுமில்லை

ஆண் : முன் வினையால் நானும்
மனமுடைந்து வாடுகையில்
முன் வினையால் நானும்
மனமுடைந்து வாடுகையில்
மாதவளைக் கண்டேன்
மாலதி நான் என்றாள்
மாதவளைக் கண்டேன்
மாலதி நான் என்றாள்

ஆண் : கட்டழகு உள்ள உடல்
கண்ணிலே நல்ல குணம்…ம்ம்…ம்ம்…..ம்ம்
காணக் கண் கூசும் கரும் குழலாள்
ஒப்புயர்வற்ற ஒய்யார நடையுடனே…..ஏ…..ஏ…
எனைக்கண்டு காரணமுங் கேட்டு
ஊரும் பேரும் ஒளியாமள் கூறுமென்றாள்

ஆண் : பசியாறச் சோறில்லை
படுத்துறங்க வீடில்லை……ஈ…..ஈ…
நசித்திடிந்த சத்திரத்தில்
நான் போய் படுத்திருந்தேன்
நடு நிசியில் பேய்க் கூட்டம்
வரக்கண்டு பயந்து…..ஈ…..ஈ…
ஓடினேன் ஓடி ஒளிந்தேன்
அம்மம்மா உனை நான் கண்டேன்…
நான் உனைக் கண்டேன்

ஆண் : தாலி கட்டும் பெண்டாட்டி
தங்கு தடை ஏதுமில்லை
தாலி கட்டும் பெண்டாட்டி
தங்கு தடை ஏதுமில்லை
நானோர் அனாதை நாதி
ஏது மில்லாதவன்
நானோர் அனாதை நாதி
ஏது மில்லாதவன்
ஆன துயருக் களவில்லை
ஆன துயருக் களவில்லை
ஆதரித்தால் போது மென்றேன்

ஆண் : அன்றுமுதல் நாங்கள்
அன்பாலிணைந்து விட்டோம்
நகரத்து வீதிகளில் ககனத்துக்
கன்னிகை போல்
அவள் ஆடுவாள்

ஆண் : நான் பாடுவேன் அம்பிகை முன்
நான் பல ஆணைகள் இட்டபின்னர்
நம்பிக்கை கொண்டாள் அந்த
நாயகியை நான் மணந்தேன்

ஆண் : அவள் காணக் கிடைக்காத தங்கம்
அவள் காணக் கிடைக்காத தங்கம்
மாதவளை நான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
மாதவளை நான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
காணக் கிடைக்காத தங்கம்

ஆண் : இன்பமுடன் வாழ்க்கையிலே
இளவரசிதனைக் கண்டு
என் மணம் பறிகொடுத்தேன்
இன்னல்கள் பல நேருமென்று
இயம்பினாள் நீதி பல சொன்னாள்
நியாயம் கேட்டாள்
அழுதாள் புலம்பினாள்
அடித்துத் துரத்திவிட்டேன்
என்னிரு கண்ணின் மணியாய்
உதித்த மாமணியே
மணியே என் அன்பே அமுதே
என் ஆசைப் பொக்கிஷமே
பண்பே பாரினில் பத்தினி ரத்தினமே
இன்றுனைப் பிரிந்தேன்
இன்றுனைப் பிரிந்தேன்
இன்றுனைப் பிரிந்தேன்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here