Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kettaayae oru kelvi
Kettaayae oru kelvi
Naan vaarththaiyil badhil solla mudiyaathu
Anthiyile naan arumpaavaen
Aasaiyil ezhunthaal irumbaavaen

Male : Sugamo sugam ena karumpaavaen
Sorkkaththil anantha virunthaavaen

Male : Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu

Male : Munthaanai mogaththil panthaadum azhaginai
Kandaalum naan oru kavithai solvaen
Manthaara thendralil mandraadum idaiyinai
Thanthaalum naan adhai thazhvi kolvaen

Female : Ammaadi enakkathu pudhiya kadhai
Aanaalum unnidam iniya suvai
Maanaga piranththu paruvasilai
Neeyaaga tharuvathil thadaigal illai

Male : Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu

Female : Aththaani mandabam aththaanai kandathum
Thattaamal kadhavugal thirakkindrana
Anantha pookkalil thaen vantha vegathil
Angangal padakena mithakkindrana

Male : Senthoora mugaththinil thuruthuruppu
Semaantha maarbinil paraparappu
Aaramba kadhalin suvai arinthu
Anantham theduthu anai udainthu
Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu

Male : Rasaththi poonjittu rajavin kaipattum
Pesaamal iruppathin porul ennavo
Pesaamal iruppathin porul ennavo
Penn paadum perinbam adhuvallavo

Male : Kelaamal kettathu nadakkindrathu
Female : Paaramal paarththathu inikkindrathu
Male : Saeraamal saernthathu suvaikkindrathu
Female : Theeraamal sugam pera azhaikkindrathu

Male : Kettaayae oru kelvi
Naan vaarththaiyil bathil solla mudiyaathu

Female : Amaithiyilae naan arumpaavaen
Male : Aasaiyil ezhunthaal irumpaavaen
Sugamo sugam ena karumpaavaen
Sorkaththil anantha virnthaavaen

Female : ……………………
Male : ……………………..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
அந்தியிலே நான் அரும்பாவேன்
ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்

ஆண் : சுகமோ சுகம் என கரும்பாவேன்
சொர்க்கத்தில் ஆனந்த விருந்தாவேன்

ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது

ஆண் : முந்தானை மேகத்தில் பந்தாடும் அழகினை
கண்டாலும் நான் ஒரு கவிதை சொல்வேன்
மந்தார தென்றலில் மன்றாடும் இடையினை
தந்தாலும் நான் அதை தழுவிக் கொள்வேன்

பெண் : அம்மாடி எனக்கது புதியக் கதை
ஆனாலும் உன்னிடம் இனிய சுவை
மானாக பிறந்தது பருவச்சிலை
நீயாக தருவதில் தடைகள் இல்லை

ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது

பெண் : அத்தாணி மண்டபம் அத்தானைக் கண்டதும்
தட்டாமல் கதவுகள் திறக்கின்றன
ஆனந்த பூக்களில் தேன் வந்த வேகத்தில்
அங்கங்கள் படகென மிதக்கின்றன

ஆண் : செந்தூர முகத்தினில் துறுதுறுப்பு
செம்மாந்த மார்பினில் பரபரப்பு
ஆரம்ப காதலின் சுவை அறிந்து
ஆனந்தம் தேடுது அணை உடைந்து
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது

ஆண் : ராசாத்தி பூஞ்சிட்டு ராஜாவின் கைபட்டும்
பேசாமல் இருப்பதின் பொருள் என்னவோ
பேசாமல் இருப்பதில் லேசான சுகம் உண்டு
பெண் பாடும் பேரின்பம் அதுவல்லவோ

ஆண் : கேளாமல் கேட்டது நடக்கின்றது
பெண் : பாராமல் பார்த்தது இனிக்கின்றது
ஆண் : சேராமல் சேர்ந்தது சுவைக்கின்றது
பெண் : தீராமல் சுகம்பெற அழைக்கின்றது

ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது

பெண் : அமைதியிலே நான் அரும்பாவேன்
ஆண் : ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்
சுகமோ சுகம் என கரும்பாவேன்
சொர்க்கத்தில் ஆனந்த விருந்தாவேன்

பெண் : ……………………….
ஆண் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here