Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : Ketti melam kottura kalyaanam
Thanga thaali kattura kalyaanam
Poo vilangu maattura kalyaanam
Enna kalyaanamadi kalyaanam
Unga kalyaanamadi kalyaanam

Female : Ketti melam kottura kalyaanam
Thanga thaali kattura kalyaanam
Poo vilangu maattura kalyaanam
Enna kalyaanamadi kalyaanam
Unga kalyaanamadi kalyaanam

Female : Vethilai paakku vachu
Adhilae oorai varavazhaichu
Vethilai paakku vachu
Adhilae oorai varavazhaichu
Kuthu vilakku vachu
Naduvae kolam varanju vachu
Kuthu vilakku vachu
Naduvae kolam varanju vachu

Female : {Maavilai pandhalil maappillai paiyan
Maalaiyiduvaanaam
Vanna chaelai anindhaval
Maalai koduthavan kaalai thoduvaalaam} (2)

Female : Indha yaemaalikkum komaalikkum
Kalyaanamaam kalyaanam
Indha yaemaalikkum komaalikkum
Kalyaanamaam kalyaanam
Enna kalyaanamadi kalyaanam
Unga kalyaanamadi kalyaanam

Female : Ketti melam kottura kalyaanam
Thanga thaali kattura kalyaanam
Poo vilangu maattura kalyaanam
Enna kalyaanamadi kalyaanam
Unga kalyaanamadi kalyaanam

Female : Manjalai poosikkittu
Kaalilae minji aninjikittu
Anji nanadhukittu
Maamiyaar sonnadhai kaettukittu

Female : Veettu chirai thanil koottu kuyilena
Pennum iruppaalaam
Aval kannum kalangida kattiya kanavan
Aatti padaippaanaam

Female : Andha konaangikkum poongodikkum
Kalyaanamaam kalyaanam
Enna kalyaanamadi kalyaanam
Unga kalyaanamadi kalyaanam

Female : Pattu siragadikkum
Naanoru chittu kuruviyadi
Kattu kadangaamal malaiyil
Kottum aruviyadi
Paadi parakkavum aadi thiriyavum
Aasai pirakkumadi
Andhi maalai azhagilum solai azhagilum
Inbam irukkumadi

Female : Vanna mayilgalukkum
Mandhigalukkum
Kalyaanamaam kalyaanam
Vanna mayilgalukkum mandhigalukkum
Kalyaanamaam kalyaanam

Female : Enna kalyaanamadi kalyaanam
Unga kalyaanamadi kalyaanam

Female : Ketti melam kottura kalyaanam
Thanga thaali kattura kalyaanam
Poo vilangu maattura kalyaanam
Enna kalyaanamadi kalyaanam
Unga kalyaanamadi kalyaanam

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்க தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

பெண் : கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்க தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

பெண் : வெத்திலை பாக்கு வச்சு
அதிலே ஊரை வரவழைச்சு
வெத்திலை பாக்கு வச்சு
அதிலே ஊரை வரவழைச்சு
குத்து விளக்கு வச்சு
நடுவே கோலம் வரைஞ்சு வச்சு
குத்து விளக்கு வச்சு
நடுவே கோலம் வரைஞ்சு வச்சு

பெண் : {மாவிலைப் பந்தலில் மாப்பிள்ளைப் பையன்
மாலையிடுவானாம்
வண்ணச் சேலை அணிந்தவள்
மாலை கொடுத்தவன் காலைத் தொடுவாளாம்} (2)

பெண் : இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

பெண் : கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்க தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

பெண் : மஞ்சளைப் பூசிக்கிட்டு
காலிலே மிஞ்சி அணிஞ்சிகிட்டு
அஞ்சி நடந்துக்கிட்டு
மாமியார் சொன்னதை கேட்டுக்கிட்டு

பெண் : வீட்டு சிறைதனில் கூட்டுக் குயிலென
பெண்ணும் இருப்பாளாம்
அவள் கண்ணும் கலங்கிட கட்டிய கணவன்
ஆட்டிப் படைப்பானாம்

பெண் : அந்த கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

பெண் : பட்டுச் சிறகடிக்கும்
நானொரு சிட்டுக் குருவியடி
கட்டுக் கடங்காமல் மலையில்
கொட்டும் அருவியடி
பாடிப் பறக்கவும் ஆடித் திரியவும்
ஆசை பிறக்குமடி
அந்தி மாலை அழகிலும் சோலை அழகிலும்
இன்பம் இருக்குமடி

பெண் : வண்ண மயில்களுக்கும்
மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்

பெண் : என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்

பெண் : கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்க தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்க கல்யாணமடி கல்யாணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here