Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Kinnaththil thaeneduththu
Ennaththaal moodi vaiththaen
Ennavo iraivanukku
Ennidaththil karunai illai

Female : Kinnaththil thaeneduththu
Ennaththaal moodi vaiththaen
Ennavo iraivanukku
Ennidaththil karunai illai

Female : Aariro aaraariro….aariro aariro…
Aariro aariro aariro aariro…aaraaro….

Female : Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen
Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen
Michamulla paingiliyum kattaruththu thavikkavittaen
Itchaiyudan paaduathai en kilikku thoodhuvittaen
En kilikku thoodhuvittaen….

Female : Kinnaththil thaeneduththu

Female : Muttraththu vennilavey pettra magan kannuranga
Muttraththu vennilavey pettra magan kannuranga
Sattru nee thaalaattu thaai vadivil nee irunthu
Ennai nee paarththa pinbum
Sollavo vaarththaiyillai

Female : Thanthaikko orr iravu thaayaarkko munnooru
Thanthaikko orr iravu thaayaarkko munnooru
Munnoorum kanda kangal kanneeril vaaduthammaa
Kanneeril padagu vittu pillaiyidam oduthammaa
Pillaiyidam oduthammaa….

Female : Kinnaththil thaeneduththu
Ennaththaal moodi vaiththaen
Ennavo iraivanukku
Ennidaththil karunai illai

Female : Aariro aaraariro….aariro aariro…
Aariro aariro aariro aariro…aaraaro….
Aariro aariro aariro aariro…

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து
எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு
என்னிடத்தில் கருணை இல்லை

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து
எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு
என்னிடத்தில் கருணை இல்லை

பெண் : ஆரிரோ ஆராரிரோ……ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ…….ஆராரோ…..

பெண் : ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன்
ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன்
மிச்சமுள்ள பைங்கிளியும் கட்டறுந்து தவிக்க விட்டேன்
இச்சையுடன் பாடுவதை என் கிளிக்கு தூது விட்டேன்
என் கிளிக்கு தூது விட்டேன்………..

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து

பெண் : முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க
முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க
சற்று நீ தாலாட்டு தாய் வடிவில் நீ இருந்து
என்னை நீ பார்த்த பின்பும்
சொல்லவோ வார்த்தையில்லை……….

பெண் : தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு
தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு
முன்னூறும் கண்ட கண்கள் கண்ணீரில் வாடுதம்மா
கண்ணீரில் படகு விட்டு பிள்ளையிடம் ஓடுதம்மா
பிள்ளையிடம் ஓடுதம்மா………….

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து
எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு
என்னிடத்தில் கருணை இல்லை

பெண் : ஆரிரோ ஆராரிரோ……ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ…….
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here