Singer : Yugendran

Music by : Bharadwaj

Lyrics by : Snehan

Male : Kizhakkae paarththaen
Vidiyalaai irunthaai anbu thozhi
En jannalin oram
Thendralaai vanthathai anbu thozhi

Male : Thanimaiyil irunthaal
Ninaivaai iruppai anbuthozhai
Naan irantho pirantho
Pudhithaai aanaen unnaal thozhi
Thozhi unthan varugaiyaal
Nenjam thooimaiyaai aanathadi
Nalla thozhi nalla noolagam unnaal purinthathadi

Male : Kizhakkae paarththaen
Vidiyalaai irunthaai anbu thozhi
En jannalin oram
Thendralaai vanthathai anbu thozhi

Male : Well my friend
I have something to say
I want you to listen
Listen to me
This is what i have to say
Here it goes..

Male : Thaagam endru solgiraen
Marakandu ondrai tharugiraai
Pasikkuthu endru solgiraen
Nelmani ondrai tharugiraai

Male : Unthan kai viral pidikkaiyil
Pudhithaai nambikkai pirakkuthu
Unthan kooda nadakkaiyil
Onbathaam dhisaiyum thirakkuthu

Male : En bayanaththil ellaam
Nee kaikaatti maramaai mulaiththaai
En manathai uzhuthu
Nee nalla vithaigalai vithaithaai

Male : Ennai naanae sethukka
Nee unnaiyae uliyaai thanthaai
En palam ennavenddru enakku
Nee indruthaan unara vaiththaai

Male : Kizhakkae paarththaen
Vidiyalaai irunthaai anbu thozhi
En jannalin oram
Thendralaai vanthathai anbu thozhi

Male : Thanimaiyil irunthaal
Ninaivaai iruppai anbuthozhai
Naan irantho pirantho
Pudhithaai aanaen unnaal thozhi
Thozhi unthan varugaiyaal
Nenjam thooimaiyaai aanathadi
Nalla thozhi nalla noolagam unnaal purinthathadi

Male : Mazhaiyo unthan punnagai
Manasellaam mella nanaiyuthae
Paniyo unthan paarvaigal
En kannimai mayirkalil thoonguthae

Male : Verukkul vizhuntha neer thuli
Poovukkum puththuyir kodukkuthae
Unakkul yaerpadum ursavam
Ennaiyum kuthookala paduththuthae

Male : Thozhi oruththi kidaiththaal
Ingu innoru piravi kidaikkum
Idhu varai intha unamai
Yaen theriyavillai evarkkum

Male : Maattarangal nirainthathae vaazhakkai
Adhai unnaal unarnthaen thozhi
Padaiththavan kettaal kooda
Unnai koduththidamaattaen thozhi

Male : Kizhakkae paarththaen
Vidiyalaai irunthaai anbu thozhi
En jannalin oram
Thendralaai vanthathai anbu thozhi

Male : Thanimaiyil irunthaal
Ninaivaai iruppai anbuthozhai
Naan irantho pirantho
Pudhithaai aanaen unnaal thozhi
Thozhi unthan varugaiyaal
Nenjam thooimaiyaai aanathadi
Nalla thozhi nalla noolagam unnaal purinthathadi

Male : Kizhakkae paarththaen
Vidiyalaai irunthaai anbu thozhi
En jannalin oram
Thendralaai vanthathai anbu thozhi

பாடகர் : யுகேந்திரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பாடலாசிரியர் : சினேகன்

ஆண் : கிழக்கே பார்த்தேன்
விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம்
தென்றலாய் வந்தாய் அன்பு தோழி

ஆண் : தனிமையில் இருந்தால்
நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ
புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால்
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

ஆண் : கிழக்கே பார்த்தேன்
விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம்
தென்றலாய் வந்தாய் அன்பு தோழி

ஆண் : வெல் மை பிரண்டு
ஐ ஹேவ் சம்திங் டு சே
ஐ வான்ட் யு டு லிஸ்ஸன்
லிஸ்ஸன் டு மீ
திஸ் இஸ் வாட் ஐ ஹேவ் டு சே
ஹியர் இட் கோஸ்

ஆண் : தாகம் என்று சொல்கிறேன்
மரக் கன்று ஒன்றை தருகிறாய்
பசிக்குது என்று சொல்கிறேன்
நெல்மனி ஒன்றை தருகிறாய்

ஆண் : உந்தன் கை விரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது

ஆண் : என் பயணத்தில் எல்லாம்
நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்

ஆண் : என்னை நானே செதுக்க
நீ உன்னையே உளியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்

ஆண் : கிழக்கே பார்த்தேன்
விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம்
தென்றலாய் வந்தாய் அன்பு தோழி

ஆண் : தனிமையில் இருந்தால்
நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ
புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால்
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

ஆண் : மழையோ உந்தன் புன்னகை
மனசெல்லாம் மெல்ல நனையுதே
பனியோ உந்தன் பார்வைகள்
என் கண்ணிமை மயிர்களில் தூங்குதே

ஆண் : வேருக்குள் விழுந்த நீர் துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்படும் உற்சவம்
என்னையும் குதூகலப் படுத்துதே

ஆண் : தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்

ஆண் : மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி

ஆண் : கிழக்கே பார்த்தேன்
விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம்
தென்றலாய் வந்தாய் அன்பு தோழி

ஆண் : தனிமையில் இருந்தால்
நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ
புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால்
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

ஆண் : கிழக்கே பார்த்தேன்
விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம்
தென்றலாய் வந்தாய் அன்பு தோழி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here