Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : R. Parthasarathi

Female : Kizhakku veluthadhadi
Keezh vaanam sivandhadhadi
Kadhiravan varavu kandu
Kamala mugam malarndhadhadi
Engal kudumbam indru
Yereduthu nadandhadhadi
Indru vandha thendralukku
Idhayamellaam thirandhadhadi

Female : Kizhakku veluthadhadi
Keezh vaanam sivandhadhadi
Kadhiravan varavu kandu
Kamala mugam malarndhadhadi

Female : Odiya maegam indru
Mazhaiyaaga pozhindhadhadi
Ooraarkku kidaikkum endru
Ooraniyil vizhindhadhadi
Kaadu sendra maada puraa
Veedu vandhu saerndhadhadi
Veedu vandha magizhchiyilae
Vizhaa kolam kondadhadi

Female : Kizhakku veluthadhadi
Keezh vaanam sivandhadhadi
Kadhiravan varavu kandu
Kamala mugam malarndhadhadi

Male : Vaanamae vaiyamae
Nee thandha valamellaam
Maanidar urimaiyammaa
Naan endru solvadhai
Naam endru solvadhaal
Naadellaam vaazhumammaa
Pozhudhellaam uzhaikkindra
Ezhaiyin mugathilae
Punnagai valarumammaa
Punnagai valarumammaa

Male : Kizhakku veluthadhamma
Keezh vaanam sivandhadhamma
Kadhiravan varavu kandu
Kamala mugam malarndhadhamma
Engal kudumbam indru
Yaeredutthu nadandhadhammaa
Indru vandha thendralukku
Idhayamellaam thirandhadhammaa

Male : Kizhakku veluthadhammaa
Keezh vaanam sivandhadhammaa… aa… hoi

Female : Nallavrkku nalladhellaam
Nadappadhu thaan needhiyadi
Illaamal maari vittaal
Endha uyir vaazhumadi
Pallaandu paadungadi
Paravaigal pol aadungadi
Padhinaaru peru vaazhvum
Varugavendrae koorungadi

Male : Kizhakku veluthadhamma
Keezh vaanam sivandhadhamma
Kadhiravan varavu kandu
Kamala mugam malarndhadhamma

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததடி

பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி

பெண் : ஓடிய மேகம் இன்று
மழையாகப் பொழிந்ததடி
ஊரார்க்கு கிடைக்கும் என்று
ஊரணியில் விழுந்ததடி
காடு சென்ற மாடப் புறா
வீடு வந்து சேர்ந்ததடி
வீடு வந்த மகிழ்ச்சியிலே
விழாக் கோலம் கொண்டதடி

பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி

ஆண் : வானமே வையமே
நீ தந்த வளமெல்லாம்
மானிடர் உரிமையம்மா
நான் என்று சொல்வதை
நாம் என்று சொல்வதால்
நாடெல்லாம் வாழுமம்மா
பொழுதெல்லாம் உழைக்கின்ற
ஏழையின் முகத்திலே
புன்னகை வளருமம்மா
புன்னகை வளருமம்மா

ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததம்மா
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததம்மா

ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா… ஆ… ஹோய்

பெண் : நல்லவர்க்கு நல்லதெல்லாம்
நடப்பதுதான் நீதியடி
இல்லாமல் மாறி விட்டால்
எந்த உயிர் வாழுமடி
பல்லாண்டு பாடுங்கடி
பறவைகள் போல் ஆடுங்கடி
பதினாறு பெரு வாழ்வும்
வருகவென்றே கூறுங்கடி

ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here