Singers : P. Susheela and Ghantasala

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Kodai marainthal inbam varum
Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum

Male : Oodum thendral munnal varum
Oodum thendral munnal varum
Isai paadum kuyil oosai
Thannal varum
Oodum thendral munnal varum

Female : Vasamamalar vaavendruasainthae
Male : Aasaiyaai vandu nesam isaithathae
Female : Pesinaaal sugam varumo therinthae
Maasila inbam inimel namadhae

Female : Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum

Male : Paaringae kannae paaraai chandrodhaiyam
Female : Pagalil thondravum aamo adhisayam
Male : Paaringae kannae paaraai chandrodhaiyam
Female : Pagalil thondravum aamo adhisayam

Male : Palinghu neer thanil vilangum immathiyam
Paavai unadhoru mugamae udhayam

Male : Oodum thendral munnaal varum
Isai paadum kuyil oosai
Thannal varum
Oodum thendral munnal varum

Male : Aanandham adhu engae piranthathu
Female : Amaintha aan pen anbaal valarnthathu
Both : Oonum uyirum ondraai kalanthathu
Unmai kaadhal uravae peridhu

Both : Kodai marainthal inbam varum
Koodi pirindhavar serndhaale
Sondham varum
Kodai marainthal inbam varum

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி

பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்

பெண் : வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆண் : ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பெண் : பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே..

பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
ஆண் : பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
பாவை உனதொரு முகமே உதயம்

ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்

ஆண் : ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
பெண் : அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
இருவர் : ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
உண்மைக் காதல் உறவே பெரிது

இருவர் : கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here