Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae

Female : Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvan

Female : {Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvan} (2)

Female : Kadavul thantha dheepam
Adhu selvan kanda laabam
Yaezhai seitha paavam
Dhinam yaezhmai varumai kannae

Female : Kadavul thantha dheepam
Adhu selvan kanda laabam
Yaezhai seitha paavam
Dhinam yaezhmai varumai kannae

Female : Vanangum kaiyaalae amuthum undaagum
Nanjum vanthaalum varalaam
Maangal vanthaalum vengai vanthaalum
Madhiyaalae kandu vidalaam

Female : Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvan

Female : Ullae ulla idhayam
Adhai yaaraal kaana mudiyum
Ullae theeyum eriyum
Adhai pongum punnagai moodum

Female : Ullae ulla idhayam
Adhai yaaraal kaana mudiyum
Ullae theeyum eriyum
Adhai pongum punnagai moodum

Female : Nanmaigal seivorgal
Nandri ullorgal
Deivam enpaargal ingae
Theemai seivorin kaalam vendraalum
Mudivil povathu engae

Female : Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvan

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்…

பெண் : {கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்…} (2)

பெண் : கடவுள் தந்த தீபம்
அது செல்வன் கண்ட லாபம்
ஏழை செய்த பாவம்
தினம் ஏழ்மை வறுமை கண்ணே

பெண் : கடவுள் தந்த தீபம்
அது செல்வன் கண்ட லாபம்
ஏழை செய்த பாவம்
தினம் ஏழ்மை வறுமை கண்ணே

பெண் : வணங்கும் கையாலே அமுதும் உண்டாகும்
நஞ்சும் வந்தாலும் வரலாம்
மான்கள் வந்தாலும் வேங்கை வந்தாலும்
மதியாலே கண்டு விடலாம்

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்…

பெண் : உள்ளே உள்ள இதயம்
அதை யாரால் காண முடியும்
உள்ளே தீயும் எரியும்
அதை பொங்கும் புன்னகை மூடும்

பெண் : உள்ளே உள்ள இதயம்
அதை யாரால் காண முடியும்
உள்ளே தீயும் எரியும்
அதை பொங்கும் புன்னகை மூடும்

பெண் : நன்மைகள் செய்வோர்கள்
நன்றி உள்ளோர்கள்
தெய்வம் என்பார்கள் இங்கே
தீமை செய்வோரின் காலம் வென்றாலும்
முடிவில் போவது எங்கே

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here