Singer : M. S. Sheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Kollimalai saaral amma
Kuliradikkum boomiyamma
Kollimalai saaral amma
Kuliradikkum boomiyamma
Mangalamaai angu oru maanirundhathu
Andha maanodu aan maanum vaazhnthirunthadhu

Female : Chinna chinna kutty rendu
Sirikkum thanga petti rendu

Female : Chinna chinna kutty rendu
Sirikkum thanga petti rendu
Sernthiruntha maangalukku pirandhu vandhadhu
Andha jeevanodu paasam ennum virundhu vandhadhu

Female : Kollimalai saaral amma
Kuliradikkum boomiyamma

Female : Ooril oru vedan amma
Uyir parikkum paaviyamma

Female : Ooril oru vedan amma
Uyir parikkum paaviyamma
Ooralavum illaiyamma karunai enbadhu
Avan ullathilae pirandhadhu kodumai enbadhu
Ooralavum illaiyamma karunai enbadhu
Avan ullathilae pirandhadhu kodumai enbadhu

Female : Kaattu vedan thudithu vandhaan
Vaettaiyadi mudikka vandhaan
Kandu konda aan maanoo kobam kondathu
Andha kalathinilae aan maanin uyir pirinthathu

Female : Manammuditha kanavanaukku
Maalaiyidu katti veithu
Dhinam adhai pen maanae
Thozhudhu vandhadhu
Thann chinna chinna kuttigalai
Thozhavum sonnadhu

Female : Purinthavarai puriyum endru
Mudinthavarai solli vitten
Irundha kadhai ivvalavae ennidathilae
Ini edhirkaalam yaavaiyumae unnidathilae
Ini edhirkaalam yaavaiyumae unnidathilae

பாடகி : எம். எஸ். ஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். எம் . சுப்பையா நாயுடு

பெண் : கொல்லிமலை சாரலம்மா
குளிரடிக்கும் பூமியம்மா
கொல்லிமலை சாரலம்மா
குளிரடிக்கும் பூமியம்மா
மங்கலமாய் அங்கு ஒரு மானிருந்தது
அந்த மானோடு ஆண் மானும் வாழ்ந்திருந்தது

பெண் : சின்ன சின்ன குட்டி ரெண்டு
சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு

பெண் : சின்ன சின்ன குட்டி ரெண்டு
சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு
சேர்ந்திருந்த மான்களுக்கு பிறந்து வந்தது
அந்த ஜீவனோடு பாசமென்னும் விருந்து வந்தது..

பெண் : கொல்லிமலை சாரலம்மா
குளிரடிக்கும் பூமியம்மா

பெண் : ஊரில் ஒரு வேடனம்மா
உயிர் பறிக்கும் பாவியம்மா

பெண் : ஊரில் ஒரு வேடனம்மா
உயிர் பறிக்கும் பாவியம்மா
ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது
அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது
ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது
அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது

பெண் : காட்டு வேடன் துடித்து வந்தான்
வேட்டையாடி முடிக்க வந்தான்
கண்டு கொண்ட ஆண் மானோ கோபம் கொண்டது
அந்த களத்தினிலே ஆண் மானின் உயிர் பிரிந்தது

பெண் : மணமுடித்த கணவனுக்கு
மாலையீடு கட்டி வைத்து
தினமும் அதை பெண் மானே தொழுது வந்தது
தன் சின்ன சின்ன குட்டிகளை தொழவும் சொன்னது

பெண் : புரிந்தவரை புரியுமென்று
முடிந்தவரை சொல்லிவிட்டேன்
இருந்த கதை இவ்வளவே என்னிடத்திலே
இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே
இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here