Singers : Deepan Chakravarthy and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Konaadha sengarumbu
Koodaadhu un kurumbu
Aasaiyaaga anga inga
Azhuthi kadikkum katterumbu

Male : Padhamaana sengazhani
Parikkaadha sevvelani
Koda veyila koraikka porandha
Saaral adikkum poo mazha nee

Female : Konaadha sengarumbu
Koodaadhu un kurumbu

Female : Manmadhan vacha kuri
Pacha kili manasu
Sammadham solla koosum chinna vayasu

Male : Chandhiran sooriyan vandhu
Ninnum vanangum
Indhiran kannu pada vandha azhagu

Female : Thondharavu pinjula
Vandhadhindha nenjula
Dhoorathula vandha varavu

Male : Vaasam

Female : Haa

Male : Pudhu vaasam

Female : Haa

Male : Naesam

Female : Haa

Male : Sagavaasam

Female : Haa idhu paasam maaraadha
Naesam thaan

Male : Ippa parisathukku ugandha
Maasam thaan

Female : Konaadha sengarumbu
Koodaadhu un kurumbu
Male : Aah aahaa
Aasaiyaaga anga inga
Azhuthi kadikkum katterumbu

Male : Yelam padhamaana sengazhani
Parikkaadha sevvelani

Female : Paalula moru pattaa
Vidinjadhum thayiru
Paakkayila thavikkudhu indha uyiru

Male : Haa ammaadi nee irukkum edam
Romba uyaram
Atha nenakkaiyilae romba thuyaram

Female : Naan pudicha maappilla
Nalladhoru maappilla
Kutham illaa sutha vairam

Male : Koosum

Female : Haa

Male : Oli veesum

Female : Haa

Male : Paasam

Female : Haa

Male : Adha paesum

Female : Haa idhu mosam pogaadha
Naesam thaan

Male : Verum vaesham podaadha paasam thaan

Female : Konaadha sengarumbu
Koodaadhu un kurumbu
Aasaiyaaga anga inga
Azhuthi kadikkum katterumbu

Male : Adi padhamaana sengazhani
Parikkaadha sevvelani
Koda veyila koraikka porandha
Saaral adikkum poo mazha nee

Female : Thaanaana thaanaanaanaa

Male : Thana thanannaana thandhaanannaa

பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு

ஆண் : பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
கோட வெயில கொறைக்கப் பொறந்த
சாரல் அடிக்கும் பூ மழ நீ

பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு

பெண் : மன்மதன் வச்சக் குறி
பச்சக் கிளி மனசு
சம்மதம் சொல்லக் கூசும் சின்ன வயசு

ஆண் : சந்திரன் சூரியனும் வந்து
நின்னு வணங்கும்
இந்திரன் கண்ணு பட வந்த அழகு

பெண் : தொந்தரவு பிஞ்சுல
வந்ததிந்த நெஞ்சுல
தூரத்துல வந்த வரவு

ஆண் : வாசம்

பெண் : ஹா

ஆண் : புது வாசம்

பெண் : ஹா

ஆண் : நேசம்

பெண் : ஹா

ஆண் : சகவாசம்

பெண் : ஹா இது பாசம் மாறாத
நேசம்தான்

ஆண் : இப்ப பரிசத்துக்கு உகந்த
மாசம்தான்

பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆண் : ஆஹ் ஆஹா
பெண் : ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு

ஆண் : எளம் பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி

பெண் : பாலுல மோரு பட்டா
விடிஞ்சதும் தயிரு
பாக்கயில் தவிக்குது இந்த உயிரு

ஆண் : ஹா அம்மாடி நீ இருக்கும் எடம்
ரொம்ப உயரம்
அத்த நெனக்கையிலே ரொம்பத் துயரம்

பெண் : நான் புடிச்ச மாப்பிள்ள
நல்லதொரு மாப்பிள்ள
குத்தம் இல்லா சுத்த வைரம்

ஆண் : கூசும்

பெண் : ஹா

ஆண் : ஒளி வீசும்

பெண் : ஹா

ஆண் : பாசம்

பெண் : ஹா

ஆண் : அதப் பேசும்

பெண் : ஹா இது மோசம் போகாத
நேசம்தான்

ஆண் : வெறும் வேஷம் போடாத
பாசம்தான்

பெண் : கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு

ஆண் : அடி பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
கோட வெயில கொறைக்கப் பொறந்த
சாரல் அடிக்கும் பூ மழ நீ

பெண் : தானான தானானானா

ஆண் : தன தனன்னான தந்தானன்னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here