இசை அமைப்பாளர் : சிமான் கே கிங்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
சுலோகம் : தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே
வசனம் : …………………
ஆண் : பாதாதி கேசம் கடவுளுக்கு
கேசாதி பாதம் கன்னிகைக்கு
கேசாதி பாதத்தில் வர்ணிக்கிறேன்
என் கிளியாளைத் தமிழ்கொண்டு பூசிக்கிறேன்
கிளியாளைத் தமிழ்கொண்டு பூசிக்கிறேன்
ஆண் : கொண்டல் மேகமொன்று கொண்டைஏறிநின்று
கொண்டுலாவும் குழுலாள்
பிறை கொண்டு வார்த்த நுதலாள்
வெள்ளிக் கெண்டை மீன்கள் ரெண்டு
முண்டித் தாவிவந்து சண்டை போடும் விழியாள்
என் ரெண்டு கண்ணில் அழியாள்
ஆண் : எள்ளின் பூவிலொன்று துள்ளி நீண்டதென்று
சொல்லும் நாசியுடையாள்
நம்மை வெல்லும் ராசியுடையாள்
மெல்லக் கொள்ளை கொள்ளை கொண்டு
அள்ளித் தின்னுமென்னும்
பிள்ளை பிள்ளை இதழாள்
அதில் கள்ளை கொஞ்சம் கசிவாள்
ஆண் : ஓ சங்கும் பொன்விளைந்த
நுங்கும் வந்துவந்து
பங்கு கேட்கும் கழுத்தாள்
அதில் பொங்கும் மஞ்சள் குழைத்தாள்
அவை தங்கள் பாகமென்று
தங்கப் பாளம்ரெண்டு
தங்கும் தோள்கள் படைத்தாள்
என்னைத் தங்கிப் போக அழைத்தாள்
ஆண் : கொண்டல் மேகமொன்று கொண்டைஏறிநின்று
ஓ கொண்டல் மேகமொன்று கொண்டைஏறிநின்று
கொண்டுலாவும் குழுலாள்
பிறை கொண்டு வார்த்த நுதலாள்
வெள்ளிக் கெண்டை மீன்கள் ரெண்டு
முண்டித் தாவிவந்து சண்டை போடும் விழியாள்
என் ரெண்டு கண்ணில் அழியாள்
ஆண் : ஒன்றுபோல் வளர்ந்த ரெண்டு தேர்க்குடங்கள்
நின்றுநீளும் தனத்தாள்
கர்வம் கொன்றுபோகும் குணத்தாள்
முடி கொண்ட ஆலிலைபோல்
மின்னும் மேல்வயிற்றில்
வண்ணம் மேலும் வளர்த்தாள்
தங்கக் கிண்ணம் மூடி முடித்தாள்
முல்லைப் பூங்கொடிக்குப்
பிள்ளைபோல் பிறந்தே
இல்லை என்னும் இடையாள் –
அதில் தொல்லை செய்யும் உடையாள்
நல்ல வெள்ளைத் தந்தம் ரெண்டு
வெள்ளிப் பூண்பிடித்துச்
சொல்லிச் செய்த தொடையாள்
செவ் வல்லிப் பூவின் அடியாள்
குழு : கொண்டைஏறிநின்று கொண்டுலாவும் குழுலாள்
ஆண் : கொண்டல் மேகமொன்று
குழு : பிறை கொண்டு வார்த்த நுதலாள்
ஆண் : நுதலாள்
குழு : வெள்ளிக் கெண்டை மீன்கள் ரெண்டு
முண்டித் தாவிவந்து சண்டை போடும் விழியாள்
ஆண் : என் ரெண்டு கண்ணில் அழியாள்