Singers : Pradeep Kumar and Nithyashree Venkataraman

Music by : Narean

Male : …………….

Male : Atrai nila theindhu vittadhu
Anbae nee illai
Jannal mazhai oindhu vittadhu
Nee yen illai

Female : Echchil mutham kaindhu vittadhu
Chellam nee illai
Nenjil isai theernthu vittathu
Nee yen illai

Male : Kann rendil naan kanden aayiram iravu
Un maarbil saayamal yen intha pirivu
Female : Un vaazhvu naan indru pesiya udhadu
Mounathil kondraalae saavudhu inidhu

Male : Konjam pesu kovam enna
Thoonga kangal thaan
Naanae ennai thetrikolla
Vaarthai konjam thaan

Male : Poo marangalil minminigalum
Thee kaatru veesum
Naal muzhuthum un ninaivugal
Ooyamal pesum

Male : Mudhal murai pazhagiya theru ingae
Palamurai parugiya idazh engae
Mugir nizhal thazhuviya arai ingae
Irudhayam nirambiya uravengae

Male : Aasai mugam maranthida
Kannaal mudiyuma
Kaadhal katril uthiruma
Female : Thooram tharum valigalai
Sonnaal puriyuma
Eeram nadhiyae vizhaguma

Male : Maruthidum nodiyilum
Unadhu anbu uyir tharum
Sirithida oru murai vaa vaa anbae

Female : Konjam pesu kovam enna
Thoonga kangal thaan
Naanae ennai thaetrikolla
Vaarthai konjam thaan

Male : Kannae innum kaayam enna
Kaiyil thoonga vaa
Vaarthai ondrum thevai illai
Vaari kolven vaa….

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் நித்ய ஸ்ரீ வெங்கட்ராமன்

இசை அமைப்பாளர் : நரேன்

ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓஓ
ஓஓ ஓஓ ஓ…….

ஆண் : அற்றை நிலா தேய்ந்து விட்டது
அன்பே நீ இல்லை
ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது
நீயேன் இல்லை

பெண் : எச்சில் முத்தம் காய்ந்து விட்டது
செல்லம் நீ இல்லை
தென்றல் இசை தீர்ந்து விட்டது
நீயேன் இல்லை

ஆண் : கண்ரெண்டில் நான் கண்டேன்
ஆயிரம் இரவு
உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு

பெண் : உன் வாழ்வு நான் என்று
பேசிய உதடு
மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது

ஆண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா…
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா….

ஆண் : பூமரங்களில் மின்மினிகளும்
தீக்காற்று வீசும்
நாள் முழுவதும் உன் நினைவுகள்
ஓயாமல் பேசும்

ஆண் : முதல் முறை பழகிய தெரு இங்கே
பலமுறை பருகிய இதழ் எங்கே
முகிர் நிழல் தழுவிய அறை இங்கே
இருதயம் நிரம்பிய உறவெங்கே?

ஆண் : ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா
காதல் காற்றில் உதிருமா

பெண் : தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா
ஈரம் நதி விலகுமா..ஆ..

ஆண் : மறித்திடும் நொடியிளும் உனது அன்பு உயிர்தரும்
சிரித்திட ஒருமுறை வா வா அன்பே

பெண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா…
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா….

ஆண் : கண்ணே இன்னும் காயம் என்ன
கையில் தூங்க வா…
வார்த்தை ஒன்றும் தேவை இல்லை
வாரிக்கொள்வேன் வா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here