Singers : Vijay Yesudas and Vaishali

Music by : N. R. Ragunanthan

Male : Kodi kodiyaai
Ethanai inbam
Kotti kidakuthu
Yaavum inbam
Pullin thalai meedhu
Vairam sootum
Paniyin thuli kooda
Per inbam

Female : Theendum kaalidam
Kadhaigal pesa
Thaandi varugindra
Nadhi inbam
Neenda pidi konda
Kodaigal neetum
Marangal pola edhu inbam

Male : Netrilae vaazhvadhu
Endrum perum thunbamae
Adi intha naal pothumae
Vaazhkai per inbamae

Female : Vaazhkai
Kondattam thaanae
Vaa vaazhndhu
Parpomae naamae

Male : Kodi kodiyaai
Ethanai inbam
Kotti kidakuthu
Yaavum inbam
Pullin thalai meedhu
Vairam sootum
Paniyin thuli kooda
Per inbam

Chorus : Anbin vizhi kondu
Paarkaiyilae
Oru kuppai thottiyum
Azhagaagum
Muttaiyodu athu odaintha
Pinnae
Oru kutti chedikku athu
Oramaagaum

Chorus : Yadhum ooru endru
Sonnavarin vazhi
Thondra engalin varamaagum
Boomi muzhuvadhum unmayilae
Naam anbai vedhaithaal nalamaagum

Male : Malayil nee yera
Vazhiyil valaivellaam
Konjam bayam kaatumae
Vaa thunithu nee sella
Paadhai ellaamae
Vanna poo meetumae

Female : Vaazhkaiyae kondaatamae
Nadhi pogum neerottamae

Male : Kodi kodiyaai
Ethanai inbam
Kotti kidakuthu
Yaavum inbam
Pullin thalai meedhu
Vairam sootum
Paniyin thuli kooda
Per inbam

Chorus : Entha ooru endru
Kettuvittu
Ada entha paravaiyum
Parapathillai
Endha kadalukku serum endru
Mazhai ninaithu mannil
Vanthu kudhipathillai

Chorus : Netru kaayam athai
Ninaithu kondu
Kathir naalai vinnil vara
Marupathillai
Veetai thaandi vantha
Vazhi pokkan than
Kootin verumaigalai ninaipathillai

Male : Kizhakku athu enna
Merkku athu enna
Dhisaigal namadhaagumae
Vaa inbam athu enna
Thunbam athu enna
Yaavum ondraagumae

Female : Vaazhkaiyae kondaatamae
Nadhi pogum neerottamae

Male : Kodi kodiyaai
Ethanai inbam
Kotti kidakuthu
Yaavum inbam
Pullin thalai meedhu
Vairam sootum
Paniyin thuli kooda
Per inbam

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ்
மற்றும் வைஷாலி

இசையமைப்பாளர் :
என். ஆர். ரகுநாதன்

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்

பெண் : தீண்டும் காலிடம்
கதைகள் பேச
தாண்டி வருகின்ற
நதி இன்பம்
நீண்ட பிடி கொண்ட
கொடைகள் நீட்டும்
மரங்கள் போல இங்கு எது இன்பம்

ஆண் : நேற்றிலே வாழ்வது
என்றும் பெரும் துன்பமே
அடி இந்த நாள் போதுமே
வாழ்க்கை பேர் இன்பமே

பெண் : வாழ்க்கை
கொண்டாட்டம் தானே
வா வாழ்ந்து
பார்ப்போமே நாமே

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்

பெண் : அன்பின் விழி கொண்டு
பார்க்கையிலே
ஒரு குப்பை தொட்டியும்
அழகாகும்
முட்டையோடு அது உடைந்த
பின்னே
ஒரு குட்டி செடிக்கு அது
உரமாகவும்

பெண் : யாதும் ஊரு என்று
சொன்னவரின்
வழி தோன்ற
எங்களின் வரமாகும்
பூமி முழுவதும் உண்மையிலே
நாம் அன்பை விதைத்தால் நலமாகும்

ஆண் : மலையில் நீ ஏற
வழியில் வலைவெல்லாம்
கொஞ்சம் பயம் காட்டுமே
வா துணிந்து நீ செல்ல
பாதை எல்லாமே
வண்ண பூ மீட்டுமே

பெண் : வாழ்க்கையே கொண்டாட்டமே
நதி போகும் நீரோட்டமே

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்

பெண் : எந்த ஊரு என்று
கேட்டுவிட்டு
அட எந்த பறவையும்
பறப்பதில்லை
எந்த கடலுக்கு சேரும் என்று
மழை நினைத்து மண்ணில்
வந்து குதிப்பதில்லை

பெண் : நேற்று காயம் அதை
நினைத்து கொண்டு
கதிர் நாளை விண்ணில் வர
மறுப்பதில்லை
வீட்டை தாண்டி வந்த
வழி போக்கன்
தன் கூட்டின்
வெறுமைகளை நினைப்பதில்லை

ஆண் : கிழக்கு அது என்ன
மேற்கு அது என்ன
திசைகள் நமதாகுமே
வா இன்பம் அது என்ன
துன்பம் அது என்ன
யாவும் ஒன்றாகுமே

பெண் : வாழ்க்கையே கொண்டாட்டமே
நதி போகும் நீரோட்டமே

ஆண் : கோடி கோடியாய்
எத்தனை இன்பம்
கொட்டி கிடக்குது
யாவும் இன்பம்
புல்லின் தலை மீது
வைரம் சூட்டும்
பனியின் துளி கூட
பேர் இன்பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here