Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Koottaththilae yaarthaan koduththu vaiththavaro
En thottaththilae aada thunichal ullavaro haiyyaa….

Female : Koottaththilae yaarthaan koduththu vaiththavaro
En thottaththilae aada thunichal ullavaro
Iththaa iththaa iththaa iththaa iththaa
Koottaththilae yaarthaan koduththu vaiththavaro
En thottaththilae aada thunichal ullavaro

Female : Kaattu poovai killi killi kaniya vaippaaro
Kaattu poovai killi killi kaniya vaippaaro
Kannaadi paarththu kondae seivaaro
Kadhal seivaaro
Kadhal seivaaro bodhai kolvaaro

Female : Koottaththilae yaarthaan koduththu vaiththavaro
En thottaththilae aada thunichal ullavaro haiyyaa….

Female : Chekka sivanthirukkum sevvaazai panthalilae
Siththaadai moodi vaiththa pallaakkilae

Female : …………….

Female : Poopanthu kai kondu nee vanthu aada
Ponnaana naal paarppatho
Poopanthu kai kondu nee vanthu aada
Ponnaana naal paarppatho

Female : Paalaadai minna en melaadai pinna
Vaavendru naan ketpatho
Vaavendru naan ketpatho

Female : Koottaththilae yaarthaan koduththu vaiththavaro
En thottaththilae aada thunichal ullavaro

Female : Kallunda ponvandu thallaadum pothu
Kann kondu nee kaana pon vendumo

Female : …………….

Female : Munnaalum pinnaalum munnooru vannam
Evvannam un ennamo
Meivannam kandu un kai vannam kaattu
Kann vannam poi sollumo
Kann vannam poi sollumo

Female : Koottaththilae yaarthaan koduththu vaiththavaro
En thottaththilae aada thunichal ullavaro
Iththaa iththaa iththaa iththaa iththaa

Female : Koottaththilae yaarthaan koduththu vaiththavaro
En thottaththilae aada thunichal ullavaro

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ ஹய்யா..

பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
இத்தா இத்தா இத்தா இத்தா இத்தா
கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

பெண் : காட்டுப்பூவை கிள்ளி கிள்ளிக் கனிய வைப்பாரோ
காட்டுப்பூவை கிள்ளி கிள்ளிக் கனிய வைப்பாரோ
கண்ணாடி பார்த்துக் கொண்டே செய்வாரோ
காதல் செய்வாரோ……….
காதல் செய்வாரோ போதை கொள்வாரோ

பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ ஹய்யா..

பெண் : செக்க சிவந்திருக்கும் செவ்வாழை பந்தலிலே
சித்தாடை மூடி வைத்த பல்லாக்கிலே

பெண் : அல் லல்லாஹ் அல் லல்லாஹ்
அல் லால் லால் லால் லல்லாஹ்
அல் லல்லாஹ் அல் லல்லாஹ்
அல் லால் லால் லால் லல்லாஹ்

பெண் : பூப்பந்து கைக் கொண்டு நீ வந்து ஆட
பொன்னான நாள் பார்ப்பதோ
பூப்பந்து கைக் கொண்டு நீ வந்து ஆட
பொன்னான நாள் பார்ப்பதோ

பெண் : பாலாடை மின்ன என் மேலாடை பின்ன
வாவென்று நான் கேட்பதோ
வாவென்று நான் கேட்பதோ

பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

பெண் : கள்ளுண்ட பொன்வண்டு தள்ளாடும் போது
கண் கொண்டு நீ காண பொன் வேண்டுமோ

பெண் : அல் லல்லாஹ் அல் லல்லாஹ்
அல் லால் லால் லால் லல்லாஹ்
அல் லல்லாஹ் அல் லல்லாஹ்
அல் லால் லால் லால் லல்லாஹ்

பெண் : முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம்
எவ்வண்ணம் உன் எண்ணமோ
மெய்வண்ணம் கண்டு உன் கை வண்ணம் காட்டு
கண் வண்ணம் பொய் சொல்லுமோ
கண் வண்ணம் பொய் சொல்லுமோ

பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
இத்தா இத்தா இத்தா இத்தா இத்தா

பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here