Singer : P. Leela
Music by : Vishwanathan – Ramamoorthy
Female : Kottravan mathurai moothoor
Kothithezhundheritha thaayae
Kottravan mathurai moothoor
Kothithezhundheritha thaayae
Kuttramillatha indha kulamagal
Kozhunan thannai pattri
Vensiraiyil pottaar paadhagar
Kanavarkaaga uttrathor uthavi ketka
Un munnam nirkindren yaan…aaa…aa…aa….aa…aa…aa…
Female : Vadivathaal sinthanaiyaal vaakinaal
Vadivathaal sinthanaiyaal vaakinaal
Kanavar thiru adi thaazhndhu kaatha aramagalae
Ae….ae……ae……
Kottravanin padiyaeri vazhakuraitha pathiniyae
Nin thooya madiyaeri kann parikkum
Kulamagalai mannippayae
Kulamagalai mannippayae
Kulamagalai mannippayae
Female : Nin seyalgal ovvondrum kanavarkkae
Enbathellam unmaiyaanal
En seyalum kanavarkkae
Ingu naan vanthathum kanavarukkae
Ingu naan vanthathum kanavarukkae
Ae…..ae……..
Minnimaikkum nin thanga padhumaiyilae
Un magal naan thunivu kondu
Kannimaiyai nerungugindren
Mannithu kann koduthu kaappaaii
Kann koduthu kaappaaii
Kann koduthu kaappaaiii
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : கொற்றவன் மதுரை மூதூர்
கொதித்தெழுந்தெரித்த தாயே
கொற்றவன் மதுரை மூதூர்
கொதித்தெழுந்தெரித்த தாயே
குற்றமில்லாத இந்தக் குலமகள்
கொழுநன் தன்னை பற்றி
வெஞ்சிறையில் போட்டார் பாதகர்
கணவர்க்காக உற்றதோர் உதவி கேட்க
உன் முனம் நிற்கின்றேன் யான்……
ஆஅ……ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ…..
பெண் : வடிவத்தால் சிந்தனையால் வாக்கினால்
வடிவத்தால் சிந்தனையால் வாக்கினால்
கணவர் திரு அடிதாழ்ந்து நெறி காத்த அறமகளே
ஏ……ஏ……ஏ……
கொற்றவனின் படியேறி வழக்குரைத்த பத்தினியே
நின் தூய மடியேறிக் கண்பறிக்கும்
குலமகளை மன்னிப்பாயே
குலமகளை மன்னிப்பாயே
குலமகளை மன்னிப்பாயே
பெண் : நின் செயல்கள் ஒவ்வொன்றும் கணவர்க்கே
என்பதெல்லாம் உண்மையானால்
என் செயலும் கணவர்க்கே
இங்கு நான் வந்ததும் கணவர்க்கே
இங்கு நான் வந்ததும் கணவர்க்கே
ஏ……ஏ……
மின்னிமைக்கும் நின் தங்கப்பதுமையிலே
உன் மகள் நான் துணிவு கொண்டு
கண்ணிமையை நெருங்குகின்றேன்
மன்னித்து கண் கொடுத்து கண்கள் காப்பாய்…..
கண் கொடுத்து கண்கள் காப்பாய்…..
கண் கொடுத்து கண்கள் காப்பாய்…..