Singer : Sid Sriram

Music by : Srikanth Deva

Lyrics by : Vaira Muthu

Male : Thaalaelo thaalaelo laali laali
Thaalaelo.. thaalaelo

Male : Koyililae kudiyirunthom naangal
Angae kudiyirundha
Ellaarum dheivangal

Male : Siripposai koyilmani
Siruvargalae dheebangal
Periyavargal archagargal
Pengal ellaam pushpangal
Vaaimozhiyae mandhirangal
Vaazhvae vazhipaadu…

Male : Koyililae kudiyirunthom naangal
Angae kudiyirundha
Ellaarum dheivangal

Male : Thaalaelo thaalaelo laali laali

Male : Sengalai thattungal
Dheivathin mozhi keatkkum
Koodathil sevi saaithaal
Kummiyadi pattu varum
Adukkalaiyil nugarungal
Ammaavin vaasam varum
Padipadiyaai earungal
Parambariyin soodu varum

Male : Silambadi yenna
Uriyadi yenna
Kalmisham illaa
Silmisham enna

Male : Koottu kudumbam
Enbadhu maari
Paathu kudumbam aanathenna
Rekkai mulaitha vinmeen pola
Akkam pakkam parandhadhenna
Aaa… aaa… aaa…

Male : Koyililae kudiyirunthom naangal
Thaalaelo thaalaelo
Angae kudiyirundha
Thaalaelo …
Ellaarum dheivangal

Male : Thaalaelo thaalaelo laali laali
Thaalaelo.. thaalaelo

Male : Siripposai koyilmani
Siruvargalae dheebangal
Periyavargal archagargal
Pengal ellaam pushpangal
Vaaimozhiyae mandhirangal
Vaazhvae vazhipaadu…

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : தாலேலோ தாலேலோ லாலி லாலி
தாலேலோ தாலேலோ

ஆண் : கோயிலிலே
குடியிருந்தோம் நாங்கள்
அங்கே குடியிருந்த
எல்லாரும் தெய்வங்கள்

ஆண் : சிரிப்போசை கோயில்மணி
சிறுவர்களே தீபங்கள்
பெரியவர்கள் அர்ச்சகர்கள்
பெண் எல்லாம் புஷ்பங்கள்
வாய்மொழியே மந்திரங்கள்
வாழ்வே வழிபாடு

ஆண் : கோயிலிலே
குடியிருந்தோம் நாங்கள்
அங்கே குடியிருந்த
எல்லாரும் தெய்வங்கள்

ஆண் : தாலேலோ தாலேலோ லாலி லாலி

ஆண் : செங்கல்லைத் தட்டுங்கல்
தெய்வத்தின் மொழி கேட்கும்
கூடத்தில் செவி சாய்த்தால்
கும்மியடிப் பட்டு வரும்

ஆண் : அடுக்களையை நுகருங்கள்
அம்மாவின் வாசம் வரும்
படிபடியாய் ஏறுங்கள்
பரம்பரையின் சூடு வரவும்

ஆண் : சிலம்படி என்ன
உரியடி என்ன
கல்மிஷம் இல்லா
சில்மிஷம் என்ன

ஆண் : கூட்டுக் குடும்பம் என்பது மாறி
பாட்டுக் குடும்பம் ஆனதென்ன
றெக்கை முளைத்த விண்மீன் போல
அக்கம் பக்கம் பறந்ததென்ன
ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்
தாலேலோ தாலேலோ
அங்கே குடியிருந்தா
தாலேலோ
எல்லாரும் தெய்வங்கள்

ஆண் : தாலேலோ தாலேலோ லாலி லாலி
தாலேலோ தாலேலோ

ஆண் : சிரிப்போசை கோயில்மணி
சிறுவர்களே தீபங்கள்
பெரியவர்கள் அர்ச்சகர்கள்
பெண் எல்லாம் புஷ்பங்கள்
வாய்மொழியே மந்திரங்கள்
வாழ்வே வழிபாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here