Singers : Seerkazhi Govindarajan and P. Susheela

Music by : S. P. Kothandapani

Lyrics by : Kannadasan

Male : Kudagumalai magale…
Konattu marumagalae..aee
Kaveri poopattinathilae …
Kadalaadum thirumagalae

Female : Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu
Chorus : Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu

Male : Aadi maadham ponni aadum maadham
Chorus : Aadi maadham ponni aadum maadham
Male : Anna nadai aavesam aagum maadham
Chorus : Anna nadai aavesam aagum maadham

Chorus : Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu

Female : Ayirameenum kendai meenum iraippal
Ponni akkaraikkum ikkaraikkum vaazhvu koduppaal
Chorus : Ayirameenum kendai meenum iraippal
Ponni akkaraikkum ikkaraikkum vaazhvu koduppaal

Female : Payir mugathil irundhu pachai kaatuvaal
Ponni paadupadum ezhai veetil aduppu moottuvaal

Male : Podu ….

Chorus : Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu

Male : Kaveriyaal kandathu thaan ethanai vamsam
Aval karaiyinilae kaanbathu thaan ethanai amsam
Kaveriyaal kandathu thaan ethanai vamsam
Aval karaiyinilae kaanbathu thaan ethanai amsam
Poo virithu pottirukkum punnagai manjam
Adhil poi vilunthu aaduthamma kaadhalar nenjam
Podu

Chorus : Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu

Female : Kannagiyum maadhaviyum aadiya ponni
Engal kaaviyathil yerivitta oviya kanni
Chorus : Kannagiyum maadhaviyum aadiya ponni
Engal kaaviyathil yerivitta oviya kanni
Male : Punniyathai vaari varum kaaveri theertham
Adhai pottrukkindra pengalukku serum muhurtham

Chorus : Adhai pottrukkindra pengalukku serum muhurtham
Male : Podu

Chorus : Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu
Aadi maadham ponni aadu maadham
Anna nadai aavesam aagum maadham

Male : Podu

Chorus : Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu
Kudagunaadu ponni pirandha naadu
Chola naadu ponni puguntha veedu

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : குடகுமலை மகளே ! கோனாட்டு மருமகளே !
காவிரிப்பூம்பட்டினத்திலே கடலாடும் திருமகளே !

பெண் : குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு
குழு : குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு

ஆண் : ஆடி மாதம் பொன்னி ஆடும் மாதம்
குழு : ஆடி மாதம் பொன்னி ஆடும் மாதம்
ஆண் : அன்ன நடை ஆவேசம் ஆகும் மாதம்
குழு : அன்ன நடை ஆவேசம் ஆகும் மாதம்

குழு : குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு

பெண் : அயிரமீனும் கெண்டை மீனும் இரைப்பாள் பொன்னி
அக்கரைக்கும் இக்கரைக்கும் வாழ்வு கொடுப்பாள்
குழு : அயிரமீனும் கெண்டை மீனும் இரைப்பாள் பொன்னி
அக்கரைக்கும் இக்கரைக்கும் வாழ்வு கொடுப்பாள்

பெண் : பயிர் முகத்தில் இருந்து பச்சை காட்டுவாள் பொன்னி
பாடுபடும் ஏழை வீட்டில் அடுப்பு மூட்டுவாள்
ஆண் : போடு

குழு : குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு

ஆண் : காவிரியாள் கண்டதுதான் எத்தனை வம்சம் அவள்
கரையினிலே காண்பதுதான் எத்தனை அம்சம்
காவிரியாள் கண்டதுதான் எத்தனை வம்சம் அவள்
கரையினிலே காண்பதுதான் எத்தனை அம்சம்
பூ விரித்துப் போட்டிருக்கும் புன்னகை மஞ்சம் அதில்
போய் விழுந்து ஆடுதம்மா காதலர் நெஞ்சம் ..போடு

குழு : குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு

பெண் : கண்ணகியும் மாதவியும் ஆடிய பொன்னி எங்கள்
காவியத்தில் ஏறிவிட்ட ஓவியக் கன்னி
குழு : கண்ணகியும் மாதவியும் ஆடிய பொன்னி எங்கள்
காவியத்தில் ஏறிவிட்ட ஓவியக் கன்னி
ஆண் : புண்ணியத்தை வாரிவரும் காவிரித் தீர்த்தம்
அதைப் போற்றுகின்ற பெண்களுக்குச் சேரும் முகூர்த்தம்
குழு : அதைப் போற்றுகின்ற பெண்களுக்குச் சேரும் முகூர்த்தம்
ஆண் : போடு …

குழு : குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு
ஆடி மாதம் பொன்னி ஆடும் மாதம்
அன்ன நடை ஆவேசம் ஆகும் மாதம்

ஆண் : போடு …

குழு : குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு
குடகுநாடு பொன்னி பிறந்த நாடு
சோழ நாடு பொன்னி புகுந்த வீடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here