Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kudumbam oru kadhambam
Pala vannam pala vannam
Dhinamum madhi nayangum
Pala ennam pala ennam

Male : Devan oru paadhai devi oru paadhai
Kuzhanthai oru paadhai
Kaalam seiyum perum leelai

Male : Kudumbam oru kadhambam
Pala vannam
Dhinamum madhi nayangum
Pala ennam

Male : Devan oru paadhai devi oru paadhai
Kuzhanthai oru paadhai
Kaalam seiyum perum leelai

Male : Manaiyaal pan seithaal
Manavaalan vaazhalaam
Adhilae varumaanam aanaalum avamaanam
Veedugal thorum ingu
Idhuthaanae kelvi indru

Male : Vidinthaal oru ennam
Ellorkkum thaniyullam

Male : Kudumbam oru kadhambam
Pala vannam pala vannam
Dhinamum madhi nayangum
Pala ennam pala ennam

Male : Kanavan perithendru
Mananthaargal mangaiyargal
Uzhaippaal avalendru
Mananthaargal naayagarkal

Male : Porulaathaaraththilae
Porulthaanaa thaaram indru
Porulaathaaraththilae
Porulthaanaa thaaram indru
Iruvar uzhaiththaalthaan
Innaalilae pasi theerum

Male : Kudumbam oru kadhambam
Pala vannam
Dhinamum madhi nayangum
Pala ennam

Male : Irandu kudhiraiyilae
Oru manithan povathenna
Irandu ninaivugalil
Sila manithar vaazhvathenna

Male : Kaalangalthorum
Avar sinthanaiyil maattramenna
Manithan ninaikkindran
Iraivan athai maattrugindraan

Male : Kudumbam oru kadhambam
Pala vannam pala vannam
Dhinamum madhi nayangum
Pala ennam pala ennam

Male : Devan oru paadhai devi oru paadhai
Kuzhanthai oru paadhai
Kaalam seiyum perum leelai

Male : Kudumbam oru kadhambam
Pala vannam
Dhinamum madhi nayangum
Pala ennam

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்

ஆண் : தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை

ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம்

ஆண் : தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை

ஆண் : மனையாள் பணி செய்தால்
மணவாளன் வாழலாம்
அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்
வீடுகள் தோறும் இங்கு
இதுதானே கேள்வி இன்று

ஆண் : விடிந்தால் ஒரு எண்ணம்
எல்லோர்க்கும் தனியுள்ளம்

ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்

ஆண் : கணவன் பெரிதென்று
மணந்தார்கள் மங்கையர்கள்
உழைப்பாள் அவளென்று
மணந்தார்கள் நாயகர்கள்

ஆண் : பொருளாதாரத்திலே
பொருள்தானா தாரம் இன்று
பொருளாதாரத்திலே
பொருள்தானா தாரம் இன்று
இருவர் உழைத்தால்தான்
இந்நாளிலே பசி தீரும்

ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம்

ஆண் : இரண்டு குதிரையிலே
ஒரு மனிதன் போவதென்ன
இரண்டு நினைவுகளில்
சில மனிதர் வாழ்வதென்ன

ஆண் : காலங்கள்தோறும்
அவர் சிந்தனையில் மாற்றமென்ன
மனிதன் நினைக்கின்றான்
இறைவன் அதை மாற்றுகின்றான்

ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்

ஆண் : தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை

ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here