Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Kukkoo kukkoo kuyilakka
Idhai kobam illamal kelakka
Kiki kiki kiliyakka
Idhai kettu solloru vazhiyakka akka
Kukkoo kukkoo kuyilakka
Idhai kobam illamal kelakka
Kiki kiki kiliyakka
Idhai kettu solloru vazhiyakka akka
Kukkoo kukkoo kuyilakka

Female : Athaan endroru azhagu vaarthai
Adainthirukkirathu manadhilae
Adhai azhuthamaaga solla vandhen
Kural varavillai veliyilae

Female : Athaan endroru azhagu vaarthai
Adainthirukkirathu manadhilae
Adhai azhuthamaaga solla vandhen
Kural varavillai veliyilae

Female : Avar udalil vilundha kaayangalai
Theernthu vitten viraivilae
Udalil vilundha kaayangalai
Theernthu vitten viraivilae
En manadhil vilundha kaayangalai
Maattri vaikka vazhiyillae
Manadhil vilundha kaayangalai
Maattri vaikka vazhiyillae

Female : Kukkoo kukkoo kuyilakka
Idhai kobam illamal kelakka
Kiki kiki kiliyakka
Idhai kettu solloru vazhiyakka akka
Kukkoo kukkoo kuyilakka

Female : Noiyai kodutha manidharkku
Marundhu kodukka theriyalai
Naan paayil vilundhu padutha podhum
Paalum urakkam pidikkalai

Female : Paarkka therindhu paarvai ellaam
Paarthu vitten kuyilakka
Therindhu paarvai ellaam
Paarthu vitten kuyilakka
Pudhu paadam yedhum therindhirundhaal
Padithu solloru vazhiyakka
Paadam yedhum therindhirundhaal
Padithu solloru vazhiyakka

Female : Kukkoo kukkoo kuyilakka
Idhai kobam illamal kelakka
Kiki kiki kiliyakka
Idhai kettu solloru vazhiyakka akka
Kukkoo kukkoo kuyilakka

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : குக்கூ குக்கூ குயிலக்கா
இதைக் கோபமில்லாமல் கேளக்கா
கிக்கீ கிக்கீ கிளியக்கா
இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா
குக்கூ குக்கூ குயிலக்கா
இதைக் கோபமில்லாமல் கேளக்கா
கிக்கீ கிக்கீ கிளியக்கா
இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா
குக்கூ குக்கூ குயிலக்கா

பெண் : அத்தான் என்றொரு அழகு வார்த்தை
அடைந்திருக்கிறது மனதிலே
அதை அழுத்தமாகச் சொல்ல வந்தேன்
குரல் வரவில்லை வெளியிலே

பெண் : அத்தான் என்றொரு அழகு வார்த்தை
அடைந்திருக்கிறது மனதிலே
அதை அழுத்தமாகச் சொல்ல வந்தேன்
குரல் வரவில்லை வெளியிலே

பெண் : அவர் உடலில் விழுந்த காயங்களைத்
தீர்த்து விட்டேன் விரைவிலே
உடலில் விழுந்த காயங்களைத்
தீர்த்து விட்டேன் விரைவிலே
என் மனதில் விழுந்த காயங்களை
மாற்றி வைக்க வழியில்லே
மனதில் விழுந்த காயங்களை
மாற்றி வைக்க வழியில்லே

பெண் : குக்கூ குக்கூ குயிலக்கா
இதைக் கோபமில்லாமல் கேளக்கா
கிக்கீ கிக்கீ கிளியக்கா
இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா
குக்கூ குக்கூ குயிலக்கா

பெண் : நோயைக் கொடுத்த மனிதருக்கு
மருந்துக் கொடுக்கத தெரியலை
நான் பாயில் விழுந்து படுத்த போதும்
பாழும் உறக்கம் பிடிக்கலை

பெண் : பார்க்கத் தெரிந்து பார்வை எல்லாம்
பார்த்து விட்டேன் குயிலக்கா
தெரிந்து பார்வை எல்லாம்
பார்த்து விட்டேன் குயிலக்கா
புதுப் பாடம் ஏதும் தெரிந்திருந்தால்
படித்துச் சொல்லொரு வழியக்கா
பாடம் ஏதும் தெரிந்திருந்தால்
படித்துச் சொல்லொரு வழியக்கா

பெண் : குக்கூ குக்கூ குயிலக்கா
இதைக் கோபமில்லாமல் கேளக்கா
கிக்கீ கிக்கீ கிளியக்கா
இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா
குக்கூ குக்கூ குயிலக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here