Singer : T. M. Soundararajan and B. S. Sasireka

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Kurudaana kavinganukku oothaappoo enna
Rosaappoo enna
Sevidaana rasikanukku kalyaani enna
Kaambodhi enna

Male : Poo manakkaathu kuzhal manakkaathu
Uyir irukkaathu udal thedum kaadu
Poo manakkaathu kuzhal manakkaathu
Uyir irukkaathu udal thedum kaadu

Female : Kalyaanaththil thaali katta
Naathaswaram melamittaal
Innaalilae nee pogiraai
En thaaliyaivo nee ketkkiraai

Female : Naan pottu vaippaen poova vaippaen aiyaa
Antha paakkiamthaan pari poguthaiyaa
Pattu selaiyai vaangi thanthaaiaiyaa
Pattu naan pogavae vella selaiaiayaa

Male : Katttililae udan iruppaal
Kattai saainthidavae kadhariduvaal
Kaattinilae vettum kuzhiyil
Kalimannai vittaal yaariruppaar

Male : Pachchayilam mattaiyilae
Meththai onnu podayilae
Pachchaikiliyo vittu pirivaal
Sikki thavippaal
Pantham paasam ellaam andrae vilagum

Male : Kurudaana kavinganukku oothaappoo enna
Rosaappoo enna
Sevidaana rasikanukku kalyaani enna
Kaambodhi enna

Female : Uyir irunthaal perai solvaar
Adhu paranthaal pinamthaan enpaar
Neram kadanthaal maarum enpaar
Intha nilaiyae vaazhkkai enpaar

Male : Moongililae muththu pallaakku
Agil erikkaiyil soththu edharkku
Kolliyittaal vegum elumbu
Adhu kondu sella enna irukku

Male : Oorvalaththai nadaththida
Oor janangal nadanthida
Oorvalaththai nadaththida
Oor janangal nadanthida

Male : Paarththu rasikka paadaiyilae avanirukka
Yaar yaar pinnae vanthaar endravanaa arivaan

Male : Kurudaana kavinganukku oothaappoo enna
Rosaappoo enna
Sevidaana rasikanukku kalyaani enna
Kaambodhi enna

Male : Poo manakkaathu kuzhal manakkaathu
Uyir irukkaathu udal thedum kaadu
Poo manakkaathu kuzhal manakkaathu
Uyir irukkaathu udal thedum kaadu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. எஸ். சசிரேஹா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன
ரோசாப்பூ என்ன
செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன
காம்போதி என்ன

ஆண் : பூ மணக்காது குழல் மணக்காது
உயிர் இருக்காது உடல் தேடும் காடு..
பூ மணக்காது குழல் மணக்காது
உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

பெண் : கல்யாணத்தில் தாலிக் கட்ட
நாதஸ்வரம் மேளமிட்டால்
இந்நாளிலே நீ போகிறாய்
என் தாலியைவோ நீ கேட்கிறாய்

பெண் : நான் பொட்டு வைப்பேன் பூவ வைப்பேன் ஐயா
அந்த பாக்கியம்தான் பறிப்போகுதய்யா
பட்டுச் சேலையை வாங்கி தந்தாயய்யா
பட்டு நான் போகவே வெள்ள சேலையய்யா

ஆண் : கட்டிலிலே உடன் இருப்பாள்
கட்டை சாய்ந்திடவே கதறிடுவாள்
காட்டினிலே வெட்டும் குழியில்
களிமண்ணை விட்டால் யாரிருப்பார்

ஆண் : பச்சயிளம் மட்டையிலே
மெத்தை ஒன்னு போடயிலே
பச்சைக்கிளியோ விட்டுப் பிரிவாள்
சிக்கித் தவிப்பாள்
பந்தம் பாசம் எல்லாம் அன்றே விலகும்

ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன
ரோசாப்பூ என்ன
செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன
காம்போதி என்ன

பெண் : உயிர் இருந்தால் பேரை சொல்வார்
அது பறந்தால் பிணம்தான் என்பார்
நேரம் கடந்தால் மாறும் என்பார்
இந்த நிலையே வாழ்க்கை என்பார்

ஆண் : மூங்கிலிலே முத்துப் பல்லக்கு
அகில் எறிக்கையில் சொத்து எதற்க்கு
கொள்ளியிட்டால் வேகும் எலும்பு
அது கொண்டு செல்ல என்ன இருக்கு

ஆண் : ஊர்வலத்தை நடத்திட
ஊர் ஜனங்கள் நடந்திட
ஊர்வலத்தை நடத்திட
ஊர் ஜனங்கள் நடந்திட

ஆண் : பார்த்து ரசிக்க…..பாடையிலே அவனிருக்க
யார் யார் பின்னே வந்தார் என்றவனா அறிவான்

ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன
ரோசாப்பூ என்ன
செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன
காம்போதி என்ன

ஆண் : பூ மணக்காது குழல் மணக்காது
உயிர் இருக்காது உடல் தேடும் காடு..
பூ மணக்காது குழல் மணக்காது
உயிர் இருக்காது உடல் தேடும் காடு..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here