Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalaignar Karunanithi

Female : Aaa…..aaa……laalalalaalaa…
Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu

Female : Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu

Male : Karkandu thottathil paal kainthu
Karumbu kalappaiyaal yaerotti
Karkandu thottathil paal kainthu
Karumbu kalappaiyaal yaerotti
Arputhamai vilaintha kadhirmaniyae
Arputhamai vilaintha kadhirmaniyae
Anaiththu magizhvom kanmaniyae
Anaiththu magizhvom kanmaniyae

Female : Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae kulir thendralae

Male : Inba noolukku munnurai ezhuthida varuga
Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga
Inba noolukku munnurai ezhuthida varuga
Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga

Male : Muththamizh kayal vizhi mukkani un mozhi
Mukthikku oru vazhi nee muththumaari pozhi

Female : Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae

Female : Anaiththaal vilakkae irundu vidum
Angen thegam thuvandu vidum
Anaiththaal vilakkae irundu vidum
Angen thegam thuvandu vidum
Inaiththaal nammai thamizh annai
Inaiththaal nammai thamizh annai
Ini piriyaen naan endrum unnai

Female : Kurinji malarondru kulungi azhaikkuthu
Kulavida varuvaai kulir thendralae
Thendralin sugaththil thaenithazh kalanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu
Andrilaai vaazhvom inbaththil mithanthu

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கலைஞர் கருணாநிதி

பெண் : ஆஆஆஆஆ….லாலலலாலா….
குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து

பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து

ஆண் : கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து
கரும்பு கலப்பையால் ஏரோட்டி
கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து
கரும்பு கலப்பையால் ஏரோட்டி
அற்புதமாய் விளைந்த கதிர்மணியே
அற்புதமாய் விளைந்த கதிர்மணியே
அணைத்து மகிழ்வோம் கண்மணியே

பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே

ஆண் : இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக
இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக
இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக
இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக

ஆண் : முத்தமிழ் கயல் விழி முக்கனி உன் மொழி
முக்திக்கு ஒரு வழி நீ முத்தமாரி பொழி……

பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே

பெண் : அணைத்தால் விளக்கே இருண்டு விடும்
அங்கென் தேகம் துவண்டு விடும்
அணைத்தால் விளக்கே இருண்டு விடும்
அங்கென் தேகம் துவண்டு விடும்
இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை
இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை
இனி பிரியேன் நான் என்றும் உன்னை

பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது
குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே
தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து
அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here