Singer : K. S. Chithra

Music by : K. V. Mahadevan and Ilayaraja

Female : Aaa…aaa…aaa…aa…haaa…aaa…aaa…aaa…

Female : Aaa….aa….aa…haa..aa…aa…haa..aa…aaa..

Female : Dhinam thorum ammaavai
Neeraatuven
Thalai vaari azhagaaga
Poo choottuven
Pasi aara manivaayil soroottuven
Thaai pola naan maari thaalaattuven

Female : Munnooru naal
Madi thaanginaal
Andha thaai thaanae
Naan potrum kadavul vadivam
Pala koyilo pala dheivamo
Ingu veraedhu naan kaana
Ulagam muzhudhum

Female : Kuyilae ila maanguyilae…
Undhan koottil irundhu
Veliyil vandhu paadu…
Kettu adhai thaan kettu
Mella thirumbum
Enadhu thaayin pazhaiya ninaivu

Female : Mayilae malai vaazh mayilae
Vanna chiragai virithu
Azhagu nadanam aadu
Paarthu adhai thaan paarthu
Mella theliyum mayangi thavikkum
Thaayin manadhu

Female : Kuyilae ila maanguyilae

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா

பெண் : ஆஅ……ஆஅ…….ஆஅ…..ஆ…..ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் : ஆஅ……ஆஅ…….ஆஅ…..ஆ…..ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் : தினம் தோறும் அம்மாவை
நீராட்டுவேன்
தலை வாரி அழகாகப்
பூச் சூட்டுவேன்
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்

பெண் : முன்னூறு நாள்
மடி தாங்கினாள்
அந்தத் தாய் தானே
நான் போற்றும் கடவுள் வடிவம்
பல கோயிலோ பல தெய்வமோ
இங்கு வேறேது நான் காண
உலகம் முழுதும்

பெண் : குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு

பெண் : மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத் தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது

பெண் : குயிலே இள மாங்குயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here