Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Maalai enai vaattuthu
Mananaalai manam theduthu
Female : Maalai enai vaattuthu
Mananaalai manam theduthu

Male : Naatgal nagaraatho
Pozhuthum pogaatho
Female : Naatgal nagaraatho
Pozhuthum pogaatho

Male : Maalai enai vaattuthu
Female : Mananaalai manam theduthu

Male : Vizhivaasal thedi nee kolam poda
Vaazhvelaam koodi naam raagam paada
Vizhivaasal thedi nee kolam poda
Vaazhvelaam koodi naam raagam paada

Male : Mayil unnai thazhuva virumbugiraen
Kuyil thanai izhanthu pulambugiraen

Male : Ilamaiyum thoongaathaa illai
Idhayamum thoongaathaa thaagamum thaniyaathaa
Enthan thanai izhanthu pulambugiraen

Female : Maalai enai vaattuthu
Male : Mananaalai manam theduthu

Female : Un kovil sera pooththitta poo naan
Un nenjil aada poojaiyum ennaal
Un kovil sera pooththitta poo naan
Un nenjil aada poojaiyum ennaal

Female : Ninaivinil aadum en kannin oram
Nee vanthu nindraal adhu sugamaagum

Female : Thalaivanai azhaiththidavaa madiyai
Thalaiyanai aakkidvaa
Iru karam saernthidavaa illai
Enaiyae veezhththidavaa

Male : Maalai namai vaattuthu
Mananaalai imai theduthu
Female : Maalai namai vaattuthu
Mananaalai imai theduthu

Male : Naatgal nagaraatho pozhuthum pogaatho
Naatgal nagaraatho pozhuthum pogaatho

Male : Maalai namai vaattuthu
Female : Mananaalai imai theduthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
பெண் : மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

ஆண் : நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
பெண் : நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

ஆண் : மாலை எனை வாட்டுது
பெண் : மணநாளை மனம் தேடுது

ஆண் : விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

ஆண் : மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்

ஆண் : இளமையும் தூங்காதா இல்லை
இதயமும் தூங்காதா தாகமும் தணியாதா
எந்தன் மோகமும் தீராதா

பெண் : மாலை எனை வாட்டுது
ஆண் : மணநாளை மனம் தேடுது

பெண் : உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்

பெண் : நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்

பெண் : தலைவனை அழைத்திடவா மடியைத்
தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா இல்லை
எனையே வீழ்த்திடவா

ஆண் : மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது
பெண் : மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

ஆண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ

ஆண் : மாலை நமை வாட்டுது
பெண் : மணநாளை இமை தேடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here