Maalaiyittom Pongalittom Song Lyrics is song from Kaalam Vellum Tamil Film– 1970, Starring Jai Sankar, C. K. Nagesh, V. Nagaiah, Surulirajan, C. R. Vijayakumari, Vijayalalitha, Usha Rani and Gandhimathi. This song was sung by L. R. Eswari and Seerkazhi Govindarajan and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan.

Singers : L. R. Eswari and Seerkazhi Govindarajan

Music Director : Sankar Ganesh

Lyricist : Kannadasan

Male : Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom
Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom
Kaaval thara vendumadi gangaiyamma
Engal kaalam vella vendumadi gangaiyamma

Both : Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom
Kaaval thara vendumadi gangaiyamma
Engal kaalam vella vendumadi gangaiyamma

Male : Devi unnai paarkka thedi varum bothu
Thirayai pottu maraikkuraaru poosaari
Nee kodutha boomi vilanju varum bothu
Yeghabogam pannuraaru aasaami
Nee kodutha boomi vilanju varum bothu
Yeghabogam pannuraaru aasaami

Female : Avan nelathukaranaam
Rombha balathukaranaam
Avan nelathukaranaam
Rombha balathukaranaam
Nee ninaichiyinna avanumippo
Pozhaichirupaana
Nee ninaichiyinna avanumippo
Pozhaichirupaana

Male : Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom

Male : Vettai naaigaloru kaattu muyalaiyae
Virattudhu gangaiyamma amma
Virattudhu gangaiyamma
Female : Andha kaattu muyalippo
Vettai naaigaalai thurathuthu
Gangaiyamma amma thurathuthu gangaiyamma

Male : Indha sakthi vandhadhunaale
Undhan bakthiyulladhanaale
Indha sakthi vandhadhunaale
Undhan bakthiyulladhanaale
Male : Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom

Male : Kattai kooda koluthumadi
Un karppora thattu kayavar kottam ozhiyumadi
Un kann jadai pattu pattu

Female : Veettu pennai kakakum padi
Neeye soodiya malarmottu
Both : Vellum kaalam vellum enbom
Aanai un melyittu
Male : Aanai un melyittu

Male : Thaai paartha paarvaiyai thaan
Partha ullame thannai marandhadhamma
Sharmathin deivamae sakthi un
Kannilae marmam purindhadhamma

Male : Sivandha un kangalaalae
Seeruvaai enadhu thaaye
Nadanthathum unmai thaaye
Nadappadhum nanmai thaaye

Male : Maalaiyittom pongalyittom
Manasaara poojaiyittom
Kaaval thara vendumadi gangaiyamma
Engal kaalam vella vendumadi gangaiyamma

பாடகர்கள் : எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா

இருவர் : மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா

ஆண் : தேவி உன்னைப் பார்க்க தேடி வரும்போது
திரையைப் போட்டு மறைக்குறாரு பூசாரி
நீ கொடுத்த பூமி விளைஞ்சு வரும்போது
ஏகபோகம் பண்ணுறாரு ஆசாமி
நீ கொடுத்த பூமி விளைஞ்சு வரும்போது
ஏகபோகம் பண்ணுறாரு ஆசாமி

பெண் : அவன் நெலத்துகாரனாம்
ரொம்ப பலத்துக்காரனாம்
அவன் நெலத்துகாரனாம்
ரொம்ப பலத்துக்காரனாம்
நீ நினைச்சியின்னா அவனுமிப்போ
பொழைச்சிருப்பானா….
நீ நினைச்சியின்னா அவனுமிப்போ
பொழைச்சிருப்பானா…………

ஆண் : மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்

ஆண் : வேட்டை நாய்களொரு காட்டு முயலையே
விரட்டுது கங்கையம்மா அம்மா
விரட்டுது கங்கையம்மா
பெண் : அந்தக் காட்டு முயலிப்போ
வேட்டை நாய்களைத் துரத்துது
கங்கையம்மா அம்மா துரத்துது கங்கையம்மா

ஆண் : இந்த சக்தி வந்ததெதனாலே
உந்தன் பக்தியுள்ளதனாலே
இந்த சக்தி வந்ததெதனாலே
உந்தன் பக்தியுள்ளதனாலே
ஆண் : மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்

ஆண் : காட்டைக் கூடக் கொளுத்துமடி
உன் கற்பூரத்தட்டு கயவர் கூட்டம் ஒழியுமடி
உன் கண் ஜாடை பட்டு பட்டு…….

பெண் : வீட்டுப் பெண்ணைக் காக்கும்படி
நீ சூடிய மலர்மொட்டு
இருவர் : வெல்லும் காலம் வெல்லும் என்போம்
ஆணை உன் மேலிட்டு
ஆண் : ஆணை உன் மேலிட்டு

ஆண் : தாய் பார்த்த பார்வையைத்தான்
பார்த்த உள்ளமே தன்னை மறந்ததம்மா
தர்மத்தின் தெய்வமே சக்தி உன்
கண்ணிலே மர்மம் புரிந்ததம்மா

ஆண் : சிவந்த உன் கண்களாலே
சீறுவாய் எனது தாயே
நடந்ததும் உண்மை தாயே
நடப்பதும் நன்மை தாயே

ஆண் : மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here