Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Maalaiyittu poo mudiththa manamagalaaga
Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga
Maalaiyittu poo mudiththa manamagalaaga
Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga

Male : Santhaiyilae vaangiyathor vellaadu
Dheiva sannathiyai thedugindra paliyaadu
Panthayaththai poottavanum vendraanae
Idhai padaiththavanum paarththu siriththu nindraanae

Male : Maalaiyittu poo mudiththa manamagalaaga
Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga

Male : Kungumaththin paaram aval nettriyilae
Oru kudumpa paaram aval nenjinilae
Thangukindra kuzhanthai sumai thaniyoru paaram
Thangukindra kuzhanthai sumai thaniyoru paaram
Ival thaayaanaal varum saabam perum paaram
Ival thaayaanaal varum saabam perum paaram

Male : Vanthathaiyae enni enni thavippaalo
Ini varuvatharkkae kaaththirunthu thudippaalo
Santhanamaai saernthirunthu manappaalo
Oru sariththiramaai nilaiththirunthu vaazhvaalo…

Male : Maalaiyittu poo mudiththa manamagalaaga
Vidhi mounamaaga selluthadaa oorvalamaaga

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மாலையிட்டு பூ முடித்த மணமகளாக
விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக
மாலையிட்டு பூ முடித்த மணமகளாக
விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக

ஆண் : சந்தையிலே வாங்கியதோர் வெள்ளாடு
தெய்வ சன்னிதியை தேடுகின்ற பலியாடு
பந்தயத்தை பூட்டவனும் வென்றானே
இதை படைத்தவனும் பார்த்து சிரித்து நின்றானே…..

ஆண் : மாலையிட்டு பூ முடித்த மணமகளாக
விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக

ஆண் : குங்குமத்தின் பாரம் அவள் நெற்றியிலே
ஒரு குடும்ப பாரம் பாவை அவள் நெஞ்சினிலே
தங்குகின்ற குழந்தை சுமை தனியொரு பாரம்
தங்குகின்ற குழந்தை சுமை தனியொரு பாரம்
இவள் தாயானால் வரும் சாபம் பெரும் பாரம்…..
இவள் தாயானால் வரும் சாபம் பெரும் பாரம்…..

ஆண் : வந்ததையே எண்ணி எண்ணி தவிப்பாளோ
இனி வருவதற்கே காத்திருந்து துடிப்பாளோ
சந்தனமாய் சேர்ந்திருந்து மணப்பாளோ
ஒரு சரித்திரமாய் நிலைத்திருந்து வாழ்வாளோ…..

ஆண் : மாலையிட்டு பூ முடித்த மணமகளாக
விதி மெளனமாக செல்லுதடா ஊர்வலமாக

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here