Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Maan kanda sorgangal
Kaalam poga poga
Yaavum vetkangalae

Male : Maan kanda sorgangal
Kaalam poga poga
Yaavum vetkangalae

Male : Yen rendu pakkangal
Penn nenjil indru pongum dhukkangalae
Yen rendu pakkangal
Penn nenjil indru pongum dhukkangalae

Male : Maan kanda sorgangal
Kaalam poga poga
Yaavum vetkangalae

Male : Thaamari poovendraan kaagitha poovaanaan
Raamanai pol vandhaan ravanan polaanaan
Thaamari poovendraan kaagitha poovaanaan
Raamanai pol vandhaan ravanan polaanaan

Male : Panpadu illaamal penn paadu
Perumpaadu ippodhu
Oorukku oru ullam oorukku oru ennam
Yaarukku avan sondham yaarukku avan manjam
Kanneeril neeraada kadalthaandi vandhaalae ponmangai

Male : Maan kanda sorgangal
Kaalam poga poga
Yaavum vetkangalae

Male : Vedhangal arigindraan vedhanai tharugindraan
Nallavar sellaadha paadhaiyil selgindraan
Vedhangal arigindraan vedhanai tharugindraan
Nallavar sellaatha paadhaiyil selgindraan

Male : Appaavi pennullam ippaavi
Seyal kandu thallaaduthu
Kaalaiyil or vannam maalaiyil or vannam
Maarudhu avan paadhai vaadugiraal paavai
Poochudi vandhaalae puriyaamal nindraalae ippodhu

Male : Maan kanda sorgangal
Kaalam poga poga
Yaavum vetkangalae

Male : Yen rendu pakkangal
Penn nenjil indru pongum dhukkangalae

Male : Aasaiyil or naalil paadiya or paatil
Thaayena aanomae seiyinai kandomae
Aasaiyil or naalil paadiya or paatil
Thaayena aanome seiyinai kandome

Male : Yenindha sei endru
Thaaladha noi kondaal ippodhu
Paasathil neeraadi bandhathil poraadi
Veshathai thodarvaalaa vedhanai peruvaalaa
Oorillai uravillai thaniyaaga nindraalae poomadhu

Male : Maan kanda sorgangal
Kaalam poga poga
Yaavum vetkangalae

Male : Yen rendu pakkangal
Penn nenjil indru pongum dhukkangalae

Male : Than vazhi selgindraal sanjalam kolgindraal
Evvidam selvaalo evvidham selvaalo
Than vazhi selgindraal sanjalam kolgindraal
Evvidam selvaalo evvidham selvaalo

Male : Yengengum megangal
Yengengum panimoottam ippodhu
Indhiya thaainaatai ennugiraal mangai
Sendrida vazhiyillai thembugiraal nindru
Thaaiveetu deivangal thunaiyaaga vaaraadha ippodhu

Male : Maan kanda sorgangal
Kaalam poga poga
Yaavum vetkangalae

Male : Yen rendu pakkangal
Penn nenjil indru pongum dhukkangalae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே

ஆண் : மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே

ஆண் : தாமரை பூவென்றாள் காகித பூவானாள்
ராமனைப்போல் வந்தான் ராவணன் போலானான்
தாமரை பூவென்றாள் காகித பூவானாள்
ராமனைப்போல் வந்தான் ராவணன் போலானான்

ஆண் : பண்பாடு இல்லாமல்
பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு இன்பம்
யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவள் மஞ்சம்
தண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாளே பெண் மங்கை

ஆண் : மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே

ஆண் : வேதங்கள் அறிகின்றான் வேதனை தருகின்றான்
நல்லவர் அல்லாத பாதையில் செல்கின்றான்
வேதங்கள் அறிகின்றான் வேதனை தருகின்றான்
நல்லவர் அல்லாத பாதையில் செல்கின்றான்

ஆண் : அப்பாவி பெண் உள்ளம்
இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம் மாலையில் ஒர் வண்ணம்
மாறுது அவன் பாதை வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது

ஆண் : மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே

ஆண் : ஆசையில் ஒர் நாளில் பாடிய ஒர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினை கண்டோமே
ஆசையில் ஒர் நாளில் பாடிய ஒர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினை கண்டோமே

ஆண் : ஏனிந்த சேயென்று
தாளாத நோய் கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்ததில் போராடி
வேஷத்தை தொடர்வாளா வேதனை பெறுவாளா
ஊரில்லை உறவில்லை தனியாக நின்றாளே பூ மாது

ஆண் : மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே

ஆண் : தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவ்விதம் வெல்வாளோ
தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவ்விதம் வெல்வாளோ

ஆண் : எங்கெங்கும் மேகங்கள்
எங்கெங்கு பனிமூட்டம் இப்போது
இந்திய தாய் நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது

ஆண் : மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here