Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Maariyadhu nenjam maatriyadhu yaaro
Kaarikaiyin ullam kaana varuvaaro
Maariyadhyu nenjam maatriyavar yaaro
Kaarikaiyin ullam kaana varuvaaro
Maariyadhyu nenjam maatriyavar yaaro

Female : Naetru paartha mugam
Naetru paartha vizhi
Naetru kaettu mozhiyaavum
Kaatrilaadi varum aattru vellamena
Maatri maatri alai modhum

Female : Naetru paartha mugam
Naetru paartha vizhi
Naetru kaettu mozhiyaavum
Kaatrilaadi varum aattru vellamena
Maatri maatri alai modhum
Ammamma amma
Innum paarthaal iniyum kaettaal
Enna sugamo

Female : Maariyadhyu nenjam maatriyavar yaaro
Kaarikaiyin ullam kaana varuvaaro
Maariyadhyu nenjam maatriyavar yaaro

Female : Aadai thandhu thamizhvaadai thandhu
Manamedai vandhavanai kandu
Aasai mundhi vara naanam pindhi vara
Paesi paarkkum ninaivundu

Female : Aadai thandhu thamizhvaadai thandhu
Manamedai vandhavanai kandu
Aasai mundhi vara naanam pindhi vara
Paesi paarkkum ninaivundu
Ammamma amma
Indha naeram andha nenjil enna ninaivo

Female : Maariyadhyu nenjam maatriyavar yaaro
Kaarikaiyin ullam kaana varuvaaro
Maariyadhyu nenjam maatriyavar yaaro

Female : Kaaviyathai mana oviyathil avan
Thoovi vaitha vidhamenna
Kannil paartha padam nenjil nirkkum vidham
Kadavul thandha kalai enna

Female : Kaaviyathai mana oviyathil avan
Thoovi vaitha vidhamenna
Kannil paartha padam nenjil nirkkum vidham
Kadavul thandha kalai enna
Ammamma amma
Vanna kalaiyai kanni adaiya enna vilaiyoo

Female : Maariyadhyu nenjam maatriyavar yaaro
Kaarikaiyin ullam kaana varuvaaro
Maariyadhyu nenjam maatriyavar yaaro

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்… மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்… மாற்றியவர் யாரோ

பெண் : நேற்றுப் பார்த்த முகம் நேற்று பார்த்த விழி
நேற்றுக் கேட்ட மொழி யாவும்
காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென
மாற்றி மாற்றி அலை மோதும்

பெண் : நேற்றுப் பார்த்த முகம் நேற்று பார்த்த விழி
நேற்றுக் கேட்ட மொழி யாவும்
காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென
மாற்றி மாற்றி அலை மோதும்
அம்மம்மா அம்மா
இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால் என்ன சுகமோ…..

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்… மாற்றியவர் யாரோ

பெண் : ஆடை தந்து தமிழ்வாடை தந்து
மணமேடை வந்தவனைக் கண்டு
ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர
பேசி பார்க்கும் நினைவுண்டு

பெண் : ஆடை தந்து தமிழ்வாடை தந்து
மணமேடை வந்தவனைக் கண்டு
ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர
பேசி பார்க்கும் நினைவுண்டு
அம்மம்மா அம்மா
இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்… மாற்றியவர் யாரோ

பெண் : காவியத்தை மன ஓவியத்தில் அவன்
தூவி வைத்த விதமென்ன
கண்ணில் பார்த்த படம் நெஞ்சில் நிற்கும் விதம்
கடவுள் தந்த கலை என்ன

பெண் : காவியத்தை மன ஓவியத்தில் அவன்
தூவி வைத்த விதமென்ன
கண்ணில் பார்த்த படம் நெஞ்சில் நிற்கும் விதம்
கடவுள் தந்த கலை என்ன
அம்மம்மா அம்மா
வண்ணக் கலையை கன்னி அடைய என்ன விலையோ

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்… மாற்றியவர் யாரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here