Singers : S. Janaki and A. S. Mahadevan

Music by : M. B. Sreenivas

Female : Maasil veenaiyum maalai madhiyamum
Veesu thendralum veengila venilum
Moosu vandarai poigaiyum pondrathae
Eesan enthai inaiyadi neezhalae

Female : Maasil veenaiyum maalai madhiyamum

Female : Namasivaayavae gnyaanamum kalviyum
Namasivaayavae naanari vichaiyum
Namasivaayavae nanavindraethumae
Om namashivaaya…..(4)
Namasivaayavae nanneri kattumae

Female : Maasil veenaiyum maalai madhiyamum

Female : Viragil theeyinan paalil padu nei pol
Maraiya nindrulan maamani sodhiyaan
Male : Ahaa
Maraiya nindrulan maamani sodhiyaan

Male : Maraiya nindrulan maamani sodhiyaan

Female : Uravukol nattu unarvu kayittrinaal
Muruga vaangi kadaiya mun nirkkumae

Female : Maasil veenaiyum maalai madhiyamum

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஏ. எஸ். மஹாதேவன்

இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ்

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்

பெண் : நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
ஓம் நமச்சிவாயா …(4)
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்

பெண் : விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்
ஆண் : ஆஹா
மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்

ஆண் : மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்

பெண் : உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

பெண் : மாசில் வீணையும் மாலை மதியமும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here