Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Aa… aa..aa…aa…

Female : Ha..aa…aa…aa…aa..haa…aa..

Female : Maa thavam yaen maadhavanae
Maa thavam yaen maadhavanae
Maa thuravai nee arindhaai
Maadhuravai yaen marandhaai
Thavamum dhanamum sugamum en vasam

Female : Maa thavam yaen maadhavanae
Maa thavam yaen maadhavanae

Female : Sevvidhazho idhu thaen kani kovai…
Aa….aa…aa…a…aa…aa…aa…aa….

Female : Sevvidhazho idhu thaen kani kovai
Dhaevaa un baanamudham dhaevaa un baanamudham
Saeyizhai noolidai minnal thoranam
Kaamanin koyilil naanae gopuram
Thaenoorum aagaaya gangai
Salasala salavena varugiradhae
Vazhigiradhae aa… aa… madiyinil neeraadu

Female : Maa thavam yaen maadhavanae
Maa thavam yaen maadhavanae

Female : Thaaragaigal oru aayiram kodi…
Aa….aa…aa…a…aa…aa…aa…aa….

Female : Thaaragaigal oru aayiram kodi
Naan angae thanga nilaa
Mhum hum mhum hum
Nyaaniyin aimbulan ennil sangamam
Yaagamum yogamum enna naadagam

Male : Aa….aa…aa…a…aa…aa…aa…aa….

Female : Brammaavin kai vannam naanae
Ilamaiyil orumaiyil thanimaiyilae
Thavikkiradhae oru murai paaraayo

Female : Maa thavam yaen maadhavanae
Maa thavam yaen maadhavanae

Female : Andhi maa kalaiyil indha maegalaigal
Asaiyum asaivilae isaivilae idai odiya odiya
Nadaigal payilum mayil idhu thaanae

Male : Thattha jamtha thaka thakida jamtha thaka
Thakadheemtha thakadheemtha thaka thaam thaka
Thakida thakida thomkida namkida thakadhimi
Tharikida thaam tharikida thaam tharikida thaam

Female : Vizhiyil iru maragadham idhazhil somapaanam

Male : Thakida thaam thakida thaam thakida thaam
Dhat tharikida thaam tharikida thaam
Kidathaka tharikida thaam

Female : Nitham parimaara varavaa thalaivaa

Male : Rimma rimapaappa mapanini pamapaa

Female : Rimma rimapaappa mapanini pamapaa

Male : Thaamtha thaka thaamtha thaka dheemthaka thaa

Female : Ilaiya dhaegam iravu naeram
Viraga dhaapam eriyudhae

Male : Thakida jamtha thikida jamtha
Thomkida jamtha namkida jam

Female : Mugilaana kuzhalum undhan
Uravu thaedi alaiyudhae

Male : Thakida jamtha thikida jamtha
Thomkidathaka jamtha namkidathaka jam

Female : Thavam adhu kalaivadhu therigiradhu
Arul kodu maa dhevaa

Male : Aruginil maadhae vaa

Female : Maa thavam yaen maadhavanae
Maa thavam yaen maadhavanae
Maa thuravai nee arindhaai
Maadhuravai yaen marandhaai
Thavamum dhanamum sugamum en vasam

Female : Maa thavam yaen maadhavanae
Maa thavam yaen maadhavanae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ… ஆ… ஆ…

பெண் : ஹ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…ஹா…..ஆ…

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

பெண் : செவ்விதழோ இது தேன் கனிக் கோவை…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ….ஆ…

பெண் : செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
தேவா உன் பானமுதம் தேவா உன் பானமுதம்
சேயிழை நூலிடை மின்னல் தோரணம்
காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை
சலசல சலவென வருகிறதே
வழிகிறதே ஆ… ஆ… மடியினில் நீராடு

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

பெண் : தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…

பெண் : தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
நான் அங்கே தங்க நிலா
ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும்
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம்
தியாகமும் யோகமும் என்ன நாடகம்

ஆண் : ஆ…..ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…

பெண் : பிரம்மாவின் கை வண்ணம் நானே
இளமையில் ஒருமையில் தனிமையிலே
தவிக்கிறதே ஒரு முறை பாராயோ

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

பெண் : அந்தி மா கலையில் இந்த மேகலைகள்
அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய
நடைகள் பயிலும் மயில் இது தானே

ஆண் : தத்த ஜம்த தக தகிட ஜம்த தக
தகதீம்த தகதீம்த தக தாம் தக
தகிட திகிட தோம்கிட நம்கிட தகதிமி
தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம்

பெண் : விழியில் இரு மரகதம் இதழில் சோமபானம்

ஆண் : தகிட தாம் தகிட தாம் தகிட தாம்
தத் தரிகிட தாம் தரிகிட தாம்
கிடதக தரிகிட தாம்

பெண் : நித்தம் பரிமாற வரவா தலைவா

ஆண் : ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

பெண் : ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

ஆண் : தாம்த தக தாம்த தக தீம்தக தா

பெண் : இளைய தேகம் இரவு நேரம்
விரக தாபம் எரியுதே

ஆண் : தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிட ஜம்த நம்கிட ஜம்

பெண் : முகிலிலான குழலும்
உந்தன் உறவு தேடி அலையுதே

ஆண் : தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிடதக ஜம்த நம்கிடதக ஜம்

பெண் : தவம் அது கலைவது தெரிகிறது
அருள் கொடு மா தேவா

ஆண் : அருகினில் மாதே வா

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

பெண் : மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here