Singer : Inno Genga

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Pa. Vijay

Male : Kaalangal maarum
Kanavellaam maarum
Sollaamal irudhayangal
Idam maarum

Male : Nettrai pol endrum
Indru irukkaathu
Naalaigal naalum
Niram maaridum

Male : Sila kaalam saaralum
Sila kaalam veiyilum
Kadigaaram oda oda
Kaalam maarudhu

Male : Maatrangal ondru dhaan
Maaraadhu vaazhvilae
Vannangal maari maari
Vaanam neeludhu

Male : Adada nam vaazhkkai enbathu
Adhil nooru maattram kondathu
Irundhaalum ella maatramum
Artham ullathu oo

Male : Pagalenna iravin maattramae
Iravenna pagalin maattramae
Maatrangal thaanae vaazhvilae
Maayam seiyuthu oo

Male : Uravae unnai pirivenbadha
Pirivae unnai uravenbadha
Irandum serum vali enbadhae
Sugam enbadha

Male : Ninaivae unnai kanvenbadha
Kanavae unnai ninaivenbadha
Idhu dhaan vaazhvin azhagenbadha
Adada enbadha

Male : Indru pookkum pookkal
Naalaikku vaadum
Idhu dhaan nesamae
Maru naalil meendum poo pookkum
Adhu dhaan vaazhvin arthamae

Male : Irukaraigal illai endraalae
Nadhi payanam poguma
Maatrangal illai endraalae
Manam thannai unaruma

Male : Vaigarai megam
Vidigindra neram
Iravennum paadal
Niram maarum

Male : Veiyilin naatkal
Vidumurai ketkkum
Mazhai vandhu bhoomi
Mugam maarum

Male : Manam oru vaanilai
Mazhai veiyil polavae
Ellaamum serndhu vandhu
Vaazhkkai maarudhae

Male : Maatrangal ondru thaan
Maaraadhu vaazhvilae
Vannangal maari maari
Vaanam neeludhu

Male : Nimidathil naatkal maaridum
Nodivondril vaazhvae maaridum
Maatrangal thaanae nenjilae
Artham serthidum oo

Male : Pookkal thaan sarugaai maaridum
Sarugellaam poovaai maaridum
Maatrangal thaanae vaazhvilae
Maayam seithidum oo

பாடகர் : இன்னோ கெங்கா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் :  பா. விஜய்

ஆண் : காலங்கள் மாறும்
கனவெல்லாம் மாறும்
சொல்லாமல் இருதயங்கள்
இடம் மாறும்

ஆண் : நேற்றை போல் என்றும்
இன்றே இருக்காது
நாளைகள் நாளும் நிறம் மாறிடும்

ஆண் : சில காலம் சாரலும்
சில காலம் வெயிலும்
கடிகாரம் ஓட ஓட
காலம் மாறுது

ஆண் : மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது

ஆண் : அடடா நம் வாழ்க்கை என்பது
அதில் நூறு மாற்றம் கொண்டது
இருந்தாலும் எல்லா மாற்றமும்
அர்த்தம் உள்ளது ஓஓஓ

ஆண் : பகலென்ன இரவின் மாற்றமே
இரவென்ன பகலின் மாற்றமே
மாற்றங்கள் தானே
வாழ்விலே மாயம் செய்யுது ஓ

ஆண் : உறவே உன்னை பிரிவென்பதா
பிரிவே உன்னை உறவென்பதா
இரண்டும் சேரும் வலி என்பதே
சுகம் என்பதா

ஆண் : நினைவே உன்னை கனவென்பதா
கனவே உன்னை நினைவென்பதா
இது தான் வாழ்வின் அழகென்பதா
அடடா என்பதா

ஆண் : இன்று பூக்கும் பூக்கள்
நாளைக்கு வாடும்
இது தான் நேசமே
மறு நாளில் மீண்டும் பூ பூக்கும்
அது தான் வாழ்வின் அர்த்தமே

ஆண் : இருகரைகள் இல்லை என்றாலே
நதி பயணம் போகுமா
மாற்றங்கள் இல்லை என்றாலே
மனம் தன்னை உணருமா

ஆண் : வைகறை மேகம்
விடிகின்ற நேரம்
இரவென்னும் பாடல்
நிறம் மாறும்

ஆண் : வெயிலின் நாட்கள்
விடுமுறை கேட்கும்
மழை வந்து பூமி
முகம் மாறும்

ஆண் : மனம் ஒரு வானிலை
மழை வெயில் போலவே
எல்லாமும் சேர்ந்து வந்து
வாழ்க்கை மாறுதே

ஆண் : மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது

ஆண் : நிமிடத்தில் நாட்கள் மாறிடும்
நொடிவொன்றில் வாழ்வே மாறிடும்
மாற்றங்கள் தானே நெஞ்சிலே
அர்த்தம் சேர்த்திடும் ஓஓ

ஆண் : பூக்கள் தான் சருகாய் மாறிடும்
சருகெல்லாம் பூவாய் மாறிடும்
மாற்றங்கள் தானே வாழ்விலே
மாயம் செய்திடும் ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here