Singer : P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu

Female : Maaman kooda vazhthirunthen
Oorukkul raasathi polae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu

Female : Pakkathu oorula em purushan
Vaara kooli thaan
Panjatha paakkala em magalum
Baakiya saalithaan

Female : Uchi mela vacha poovaasam
Endrum vadamae
Onnukkulae onnaa paasam thaan
Vittu pogaamae
Paathathellaam naethodu
Odi pochu kaathodu

Female : Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu

Female : Ennuyir maaman thaan
Mgr-in mandram vaithavan
Mannavan peraithaan pachakuthi
Nenjil thaithavan

Female : Mgraara sutta sogam thaan
Engum paechaaga
Ammammavoo endhan maaman thaan
Angam punnaaga
Theekulithu ponnaanae
Deivam endru aanaanae

Female : Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu

Female : Pillaiyum naanum thaan
Thathalichu vaadum naalilae
Bandhukkal yaarumae kitta vandhu
Yaennu ketkala
Engiruntho deivam kaapaattrum
Endru solvaanga
Mgr-in thaaram en veettai
Thaedi vandhaanga
Kaasai allai thanthaanga
Kalagidaathae endraanga

Female : Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu

Female : Maaman kooda vazhthirunthen
Oorukkul raasathi polae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu

Female : …………………………..

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு

பெண் : மாமன் கூட வாழ்ந்திருந்தேன்
ஊருக்குள் ராசாத்தி போலே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு

பெண் : பக்கத்து ஊருல எம் புருஷன்
வாரக் கூலிதான்
பஞ்சத்த பாக்கல எம் மகளும்
பாக்கியசாலிதான்
உச்சி மேலே வைத்த பூவாசம்
என்றும் வாடாமே
ஒண்ணுக்குள்ளே ஒண்ணா பாசம்தான்
விட்டு போகாமே
பாத்ததெல்லாம் நேத்தோடு
ஓடிப் போச்சு காத்தோடு

பெண் : மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு

பெண் : என்னுயிர் மாமன்தான்
எம்ஜிஆரின் மன்றம் வைத்தவன்
மன்னவன் பேரைத்தான் பச்சக்குத்தி
நெஞ்சில் தைத்தவன்
எம்ஜியார சுட்ட சோகம்தான்
எங்கும் பேச்சாக
அம்மம்மாவோ எந்தன் மாமன்தான்
அங்கம் புண்ணாக
தீக்குளித்து போனானே
தெய்வம் என்று ஆனானே

பெண் : மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு

பெண் : பிள்ளையும் நானும்தான்
தத்தளிச்சு வாடும் நாளிலே
பந்துக்கள் யாருமே கிட்ட வந்து
ஏன்னு கேட்கல
எங்கிருந்தோ தெய்வம் காப்பாற்றும்
என்று சொல்வாங்க
எம்ஜிஆரின் தாரம்
என் வீட்டை தேடி வந்தாங்க
காசையள்ளி தந்தாங்க
கலங்கிடாதே என்றாங்க

பெண் : மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு

பெண் : மாமன் கூட வாழ்ந்திருந்தேன்
ஊருக்குள் ராசாத்தி போலே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு

பெண் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here