Singer : S. P. Balasubrahmanyam
Music by : Dharma Teja
Male : Madhurai meenatchi devi
Arulaatchi seiyum madhurai
Thamizhai ulagaala seidha
Uyir moochu engal madhurai
Male : Sithirai thingalil vaigai nadhi
Kallazhagarai kandathum podum jadhi
Sollilum seyalilum thurithagathi
Soll kaathidum madhuraiyil theiva nidhi
Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi
Male : Madhurai meenatchi devi
Arulaatchi seiyum madhurai
Male : Graama kalai kaaviyam
Aadal kalai ooviyam
Sirppa kalai ezhil maevum
Thamil vaazhum arulaalaiyam
Male : Konjam vizhi paarvaiyum
Sindhum isai korvaiyum
Sondhamennum manam thaedum
Dhinam koodum uravaayiram
Male : Naan maada koodal nagaram
Vaan meedhu modha uyarum
Pudhu sandham kodi valarum
Thamizh sanga geetham malarum
Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram
Male : Nettri kannai kandathu
Kuttramena chonnadhu
Eesan avan isai paadal
Pizhai endru thamizh vendrathu
Veeram ulla mann idhu
Vettriyudan vaazhudhu
Vaanmadhu valainthaengal boommikku
Vazhi kaattudhu
Male : Thaerodum veedhi mayangum
Deiveega naadham muzhangum
Paamaalai paadum arangam
Poomaalai soodi vanangum
Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram
Male : Madhurai meenatchi devi
Arulaatchi seiyum madhurai
Thamizhai ulagaala seidha
Uyir moochu engal madhurai
Male : Sithirai thingalil vaigai nadhi
Kallazhagarai kandathum podum jadhi
Sollilum seyalilum thurithagathi
Soll kaathidum madhuraiyil theiva nidhi
Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : தர்மா தேஜா
ஆண் : மதுரை… மீனாட்சி தேவி
அருளாட்சி செய்யும் மதுரை
தமிழை உலகாளச் செய்த
உயிர் மூச்சு எங்கள் மதுரை
ஆண் : சித்திரைத் திங்களில் வைகை நதி
கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி
சொல்லிலும் செயலிலும் துரிதகதி
சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி
இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி
ஆண் : மதுரை மீனாட்சி தேவி
அருளாட்சி செய்யும் மதுரை…..
ஆண் : கிராம கலைக் காவியம்
ஆடல் கலை ஓவியம்
சிற்பக் கலை எழில் மேவும்
தமிழ் வாழும் அருளாலயம்
ஆண் : கொஞ்சும் விழிப் பார்வையும்
சிந்தும் இசைக் கோர்வையும்
சொந்தமெனும் மனம் தேடும்
தினம் கூடும் உறவாயிரம்
ஆண் : நான் மாடக் கூடல் நகரம்
வான் மீது மோத உயரும்
புது சங்கம் கோடி வளரும்
தமிழ்ச் சங்க கீதம் மலரும்
மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்…
ஆண் : நெற்றிக் கண்ணைக் கண்டது
குற்றமெனச் சொன்னது
ஈசன் அவன் இசைப் பாடல்
பிழை என்று தமிழ் வென்றது
வீரம் உள்ள மண்ணிது வெற்றியுடன் வாழுது
வானமது வளைந்தெங்கள் பூமிக்கு வழி காட்டுது
ஆண் : தேரோடும் வீதி மயங்கும்
தெய்வீக நாதம் முழங்கும்
பாமாலை பாடும் அரங்கம்
பூமாலை சூடி வணங்கும்
மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்
ஆண் : மதுரை மீனாட்சி தேவி
அருளாட்சி செய்யும் மதுரை
தமிழை உலகாளச் செய்த
உயிர் மூச்சு எங்கள் மதுரை
ஆண் : சித்திரைத் திங்களில் வைகை நதி
கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி
சொல்லிலும் செயலிலும் துரிதகதி
சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி
இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி..