Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Vanagamae vaiyagamae vaazhthuraikka vaarungal
Vaaradha uravenakku vandhadhendru koorungal
Thaer kondu vaarungal thirukolam podungal
Seemaatti kalyaana oorvalathil koodungal
Oorvalathil koodungal

Female : Madhuraikku sendraal megangalae idhai
Mangai meenatchikku koorungalen
Kaasikku sendraal megangale idhai
Gangaiyin kaadhinil sollungalen
Madhuraikku sendraal megangalae idhai
Mangai meenatchikku koorungalen

Female : Aarathi thattodu valam varum pengal
Aasaiyil vilaiyaadum manavalan kangal
Orathil thaan nindru oru paarvai parkka
Ullathil uruvaagum thai madha pongal

Female : Madhuraikku sendraal megangalae idhai
Mangai meenatchikku koorungalen

Female : Androru naal poongodhai kannanai aandaal
Aandadhinaal aval peyar kooda aandaal
Mannanin tholukku malar soodi koduthaal
Mannanin tholukku malar soodi koduthaal
Manadhinai naan kaana ennaiyum alaithaal

Female : Madhuraikku sendraal megangalae idhai
Mangai meenatchikku koorungalen

Female : Indru en nilai solla varthaigal illai
Ini endhan thevaikku sodhanai illai
Indru en nilai solla varthaigal illai
Ini endhan thevaikku sodhanai illai
Kannanin kaigalil adaikkalam koduppen
Kannanin kaigalil adaikkalam koduppen
Kallilum valuvaaga karpudan iruppen

Female : Madhuraikku sendraal megangalae idhai
Mangai meenatchikku koorungalen
Kaasikku sendraal megangale idhai
Gangaiyin kaadhinil sollungalen
Madhuraikku sendraal megangalae idhai
Mangai meenatchikku koorungalen

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வானகமே வையகமே வாழ்த்துரைக்க வாருங்கள்
வாராத உறவெனக்கு வந்ததென்று கூறுங்கள்
தேர் கொண்டு வாருங்கள் திருக்கோலம் போடுங்கள்
சீமாட்டி கல்யாண ஊர்வலத்தில் கூடுங்கள்
ஊர்வலத்தில் கூடுங்கள்………!

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை
மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்
காசிக்கு சென்றால் மேகங்களே இதை
கங்கையின் காதிநில் சொல்லுங்களேன்
மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை
மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

பெண் : ஆரத்தி தட்டோடு வலம் வரும் பெண்கள்
ஆசையில் விளையாடும் மணவாளன் கண்கள்
ஓரத்தில்தான் நின்று ஒரு பார்வை பார்க்க
உள்ளத்தில் உருவாகும் தை மாதப் பொங்கல்

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை
மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

பெண் : அன்றொரு நாள் பூங்கோதை கண்ணனை ஆண்டாள்
ஆண்டதினால் அவள் பெயர் கூட ஆண்டாள்
மன்னனின் தோளுக்கு மலர் சூடிக் கொடுத்தாள்
மன்னனின் தோளுக்கு மலர் சூடிக் கொடுத்தாள்
மனதினை நான் காண என்னையும் அழைத்தாள்

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை
மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

பெண் : இன்று என் நிலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இனி எந்தன் தேவைக்கு சோதனை இல்லை
இன்று என் நிலை சொல்ல வார்த்தைகள் இல்லை
இனி எந்தன் தேவைக்கு சோதனை இல்லை
கண்ணனின் கைகளில் அடைக்கலம் கொடுத்தேன்
கண்ணனின் கைகளில் அடைக்கலம் கொடுத்தேன்
கல்லிலும் வலுவாக கற்புடன் இருப்பேன்

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை
மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்
காசிக்கு சென்றால் மேகங்களே இதை
கங்கையின் காதிநில் சொல்லுங்களேன்
மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை
மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here